மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட விவசாய அணி சார்பாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதை கண்டித்தும், ஒன்றிய அரசு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நெல்லை வண்ணார்பேட்டை செப்பாண்டியன் பாலத்தின் கீழ் ஆர்பாட்டம் நடைபெற்றது. நிகழ்விற்கு நெல்லை மாவட்ட விவசாய அணி செயலாளர் நெல்லை ஜாகிர் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் வீ.கே.புரம்.செய்யது அலி, மாவட்ட அணி நிர்வாகிகள் ராபியாசேக், பத்தமடை கனி, ஹபிபுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் கண்டன உரையாற்றினார், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, ஆதிதமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். மேலும் கோதர், புல்லட்கனி, ஐடிஐ.சங்கர், சம்சு, ஆதிமூலம், நாகராஜன், பீர், பாலா உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லைமாவட்டம் 08-08-2021
மஜக விவசாய அணி
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து! கறம்பக்குடியில் மஜக ஆர்ப்பாட்டம்! திரளானோர் பங்கேற்பு!
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் முகம்மது ஜான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணை செயலாளர்கள் முகமது பிலால், லட்சுமணன், தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.முகமது மன்சூர் B.sc ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய அணி மாநில செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம், அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் அப்துல்லா, பொருளாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் ஜியாவுதீன், இளைஞரணி செயலாளர் பாப்புலர் ஹக்கீம் ,தொழிற் சங்க செயலாளர் ராஜ்கபூர் ,நகர துணை செயலாளர் ரபியுதீன், நகர இளைஞரணி துணை செயலாளர் அர்ஷத், நகர மருத்துவ சேவை அணி துணை செயலாளர் சிராஜ்தீன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், மற்றும் தோழமை கட்சியினர் திரளாக பங்கேற்றனர். இறுதியில் நகர செயலாளர் ஆசை அப்துல்லா, நன்றியுரையாற்றினார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கறம்பக்குடி #புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம் 04.08.2021
திருவாரூரில் மஜக ஆர்ப்பாட்டம்..
#காவிரி_எங்கள்_ரத்த_ஓட்டம்... #அதை_தடுத்து_நிறுத்த_விட_மாட்டோம் ! என முழக்கம்... #மாநில_விவசாய_அணி_செயலாளர்_அப்துல்_சலாம்_பங்கேற்பு...! திருவாரூரில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், காவிரியாற்றில் மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும், கர்நாடக அரசையும், அதற்கு துணை போகும் ஒன்றிய அரசையும் கண்டித்து மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம் பங்கேற்று கண்டன உரையாற்றினார். கண்டன முழக்கங்களை மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, பொதக்குடி கிளை செயலாளர் முனவர் உசேன், கூத்தாநல்லூர் நகர இளைஞர் அணி செயலாளர் ஷேக் ஆகியோர் முழக்கங்களை எழுப்பினர். காவிரி எங்கள் ரத்த ஓட்டம்! அதை தடுத்து நிறுத்த விடமாட்டோம்! காவிரி எங்கள் வாழ்வுரிமை.. அது தென்னகத்தின் பொதுவுடைமை! என்பது போன்ற முழக்கங்கள் அதிர்ந்தன. திரளான மக்கள் இந்த ஆர்ப்பாட்ட முழக்கங்களை நின்று கவனித்து சென்றனர். மாலை 5 மணி அளவில், போக்குவரத்து நிறைந்த தைலம்மை தியேட்டர் அருகே ஆர்ப்பாட்டம் நடந்ததால், அந்த பகுதி பரபரப்பாக கவனிக்கப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட துணை செயலாளர் நத்தர் கனி, நிர்வாகிகள் திருவாரூர் சித்திக், அத்திக்கடை குத்புதீன், அடியற்கை லியாகத் அலி மற்றும் மஜக ஒன்றிய, கிளை நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து மஜகவின் ஆர்ப்பாட்ட முழக்கங்கள்…!
1) கண்டிக்கின்றோம்.. கண்டிக்கின்றோம்.. மேகதாது மலையருகில்... அணை கட்ட முயற்சிக்கும்.... கர்நாடக அரசை... வன்மையாக கண்டிக்கிறோம். 2) காவிரி எங்கள் வாழ்வுரிமை.. அது தென்னகத்தின் பொதுவுடமை.. தடுக்காதே.. தடுக்காதே.. நதியுரிமையை தடுக்காதே! 3) ஒன்றிய அரசே.. ஒன்றிய அரசே.. துணை போகாதே.. துணை போகாதே.. கர்நாடக அரசுக்கு... துணை போகாதே.. துணை போகாதே.. 4) தென்னிந்தியாவின் பசியாற்றும்.. டெல்டாவின் வயல்வெளியை.. பாலைவனம் ஆக்காதே..! 5) காவிரியில் தாகம் தணிக்கும்.. தமிழக மக்களை வஞ்சிக்காதே..! 6) செயல்படுத்து.. செயல்படுத்து.. காவிரி மேலாண்மை ஆணையத்தை... செயல்படுத்து.. செயல்படுத்து.. 7) காப்போம்.. காப்போம்.. விவசாயிகளின் உரிமைகளை... பாதுகாப்போம்! பாதுகாப்போம்!! 8) காப்போம்.. காப்போம்.. காவிரி ஆற்றின் உரிமைகளை... பாதுகாப்போம்! பாதுகாப்போம்!! 9) காவிரி எங்கள் ரத்த ஓட்டம்.. அதை தடுத்து நிறுத்த விடமாட்டோம்! 10) போராட்டம்.. இது போராட்டம்.. மஜக முன்னெடுக்கும்... உரிமை காப்பு போராட்டம்!
வேதை நகர மஜக ஆலோசனை கூட்டம்!
நாகை. செப்.03., நாகை தெற்கு மாவட்டம், வேதாரண்யம் நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரக்கத் அலி தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் அவர்கள் கலந்து கொண்டார். கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வசூல் செய்யபட்ட தொகையை நகர செயலாளர் அகமதுல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். #தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது. #வேதை நகரம் முழுவதும் கட்சி கொடியேற்றுவது. #தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஷேக் மன்சூர், MKP துபாய் மண்டல துணை செயலாளர் ஹம்தான், மீனவரணி மாவட்ட செயலாளர் செல்வமணி, IT WING மாவட்ட துணை செயலார் முபின் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING. #மஜக_நாகை_தெற்கு_மாவட்டம் 02/09/2018