ஆகஸ்ட்.21, நெல்லை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயலாளர் நிஜாம் அவர்களும், மாவட்ட மனிதநேய கலை இலக்கிய அணி செயலாளர் பத்தமடை கனி அவர்களும் இணைந்து NRK DELIVERY என்ற உணவு வினியோக செயலியை தொடங்கி உள்ளனர். இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, பால பிரஜாபதி அடிகளார், டாக்டர் சார்லஸ், ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். நெல்லையை சுற்றிலும் 20 கி.மீட்டர் சுற்றளவுக்கு செயலி மூலம் வீடுகளுக்கு வினியோக சேவை நடைபெறும் என்றும், தேவையான உணவை இதில் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், பத்தமடை ஜமாத் தலைவர் மலுக்காமலி, நேசம் காலேஜ் ஆஃப் ஹெல்த் கல்லூரி இயக்குனர் ஹனிபா, சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அஹமது சாகிப் ஆகியோரும் வாழ்த்தினர். இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர்கள் நாகை முபாரக், காயல் சாகுல், தலைமை செயற்குழு உறுப்பினர் தூத்துக்குடி ஜாஹிர், குமரி மாவட்ட செயலாளர் ஹபிஸ், தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் நஜீப், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் A1 மைதீன், முருகேசன், ஆதிமூலம், S.S.U.மைதீன், ஹபிபுல்லாஹ், அசன்கனி, சங்கரன்
Tag: MJK Party
மின் விபத்தில் பாதிக்கப்பட்ட மஜக நிர்வாகி! பொதுச்செயலாளர் நேரில் சென்று நலம் விசாரித்தார்!
ஆகஸ்ட்:21., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் முகமது தாரிக், அவர்கள் கடந்த மாதம் பணிபுரியும் இடத்தில் மின்சாரம் தாக்கி விபத்து க்குள்ளாகி நெல்லையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று நெல்லை வருகை தந்த மஜக வின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மருத்துவ மனைக்கு சென்று அவரை நலம் விசாரித்தார், பின்னர் அவரின் பெற்றோர்களிடம் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல், நாகை முபாரக், நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், கன்னி யாகுமரி மாவட்ட செயலாளர் ஃபிஜூருல் ஹஃபிஸ், தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் முகமது நஜிப், பொருளாளர் ராசுகுட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜாஹிர் உசேன், வழக்கறிஞர் அஹமது சாஹிப், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தூத்துக்குடி_மாவட்டம் 20.08.2021
தோப்புத்துறையில் மஜக முன்னெடுத்த தடுப்பூசி முகாம்!
நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முன்னெடுக்கப்பட்டது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை நீண்ட இம்முகாமில் 'கோவீ சீல்ட்' தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தடுப்பு மருந்தை செலுத்தி கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் முதல் டோஸ் போட வருகை தந்திருந்தனர். நீண்ட நாட்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் மஜக விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் நம்பிக்கையுடன் செலுத்தி கொள்ள பலர் முன் வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மா.மீ அன்பரசு, வேதாரண்யம் வட்டார சுகாதாரத் துறை மருத்துவ அலுவலர் Dr. ராஜசேகர் மற்றும் மஜக மாவட்ட துணைச் செயலாளர் S.ஷேக் அகமதுல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் அ. ஷேக் மன்சூர், நகர செயலாளர் H.முகம்மது சரிபு, நிர்வாகிகள் A. அல்டாப் பாரக், S.இம்தியாஸ், முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
பத்தமடையில் விளையாட்டு போட்டிகள்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பரிசுகள் வழங்கல்!
ஆகஸ்ட்.20., நெல்லை மாவட்டம் பத்தமடையில் NRK டெலிவரி என்ற விளையாட்டு கழகம் சார்பில் கைபந்து போட்டி நடைபெற்றது. அதன் பரிசளிப்பு விழா இன்று சிலம்பாட்டத்துடன் நடைபெற்றது. இதில் அவ்வூரை சேர்ந்த சிலம்பாட்ட வீரர்கள் கடும் வெயிலில் தங்கள் வீர தீர சாகசங்களை அரங்கேற்றினர். கடும் மதிய வெயிலில் கூடி நின்ற பொது மக்கள் ஆராவாரம் செய்தனர். நிறைவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் போட்டியில் வென்றவர்களுக்கும், தனி சாதனையாளர்களுக்கும் பரிசு கோப்பைகளையும், கேடயங்களையும் வழங்கினார். இந்நிகழ்வில் ஜமாத் தலைவர் T.M. மலுக்காம் அலி, மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல், நாகை முபாரக், மாவட்ட செயலாளர் நெல்லை. நிஜாம், மாவட்ட அணி நிர்வாகிகள் பத்தமடை கனி, முருகேசன், ஒன்றிய நிர்வாகிகள் கோதர், அசன் கனி, பத்தமடை பேருர் செயலாளர் பீர் முகம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மாவட்டம் 20.08.2021
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மஜககொடியேற்று விழா! பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி சார்பில் புதிய கொடிக்கம்பம் நிறுவப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைப்பெற்றது. பக்கிரிப்பாளையத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ரகுமான் கான் அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் மஜக மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப் அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் முக கவசங்களும், இணிப்புகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் பாபு ஷானவாஸ், அமிர்கான், அப்பு, செங்கம் நகரச் செயலாளர் பாபுலால், திருவண்ணாமலை நகர செயலாளர் அக்பர், தி.மலை அப்துல் ரஹ்மான் மற்றும் நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவண்ணாமலை_மாவட்டம் 18.08.2021