நவ.14., மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவருக்கு அவசர அறுவை சிகிச்சைக்காக வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் 05-யூனிட் இரத்த தானம் செய்தனர். அவசர சிகிச்சை நிகழ்வுகளில் இரத்தம் மிக அவசியம் தேவைப்படுகின்றது, ஆபத்தான நிலையில் உள்ள மனித உயிர்களை காக்கும் கவசமாக இந்த இரத்த கொடை அமைகின்றது இவ்வாறான சேவை அரசியல் பணியில் தொடர்ந்து மஜக மருத்துவ சேவை அணி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 13.11.21
மஜக மருத்துவ சேவை அணி
மஜக மருத்துவ சேவை அணி
இரத்ததான சேவைக்கான விருது பெற்ற மஜக!
செப்:04., உதகையில் உயிர் நீத்தார் நல்லடக்க சேவா அறக்கட்டளை சார்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் இரத்ததானம் மற்றும் மருத்துவ சேவையை பாராட்டும் விதமாக சான்றிதழும், கேடயமும், மாவட்ட செயலாளர் கமாலுதீன், அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் காலிப், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ஹமீத், முகமது அதிப், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் தப்ரேஸ், ஆகியோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 04.09.2021
மஜக மருத்துவ சேவை அணிக்கு பாராட்டு.! பாராட்டு சான்றிதழை பெற்றார் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான்..!!
கொரோனா நோய் தொற்று பரவல் நேரத்தில் சென்னை மண்டலத்தில் மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களுக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் பாராட்டு விழா நடைப்பெற்றது. கொரோனா நோய்த்தொற்று நேரங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது, இரத்த தானம், நோயாளிகளுக்கு படுக்கைகள் ஏற்பாடு, கொரோனாவால் இறந்த உடல்கள் அடக்கம் என பல்வேறு பணிகளை செய்து வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின், மருத்துவ சேவை அணிக்கு இன்று நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மருத்துவமனை இயக்குனர் எழிலரசி அவர்கள் பாராட்டு சான்றிதழை வழங்க, மஜக மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் அதை பெற்றுக்கொண்டார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 15.08.2021
மஜக தென்காசி மாவட்டம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்…!
தென்காசி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி, மருத்துவ சேவை அணி மற்றும் நாகர் கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் அச்சன் புதூர் இந்தியான் நர்சரி பிரைமரி பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட துணை செயலாளர் வாவை A.இனாயத்துல்லாஹ், தலைமை தாங்கினார், அச்சன் புதூர் செயலாளர் முஹம்மது நாசர். துணை செயலாளர் சேக் முகமது, ஆட்டோ செய்யது சபிக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மாவட்ட செயலாளர் அச்சன் புதூர் M.பீர் மைதீன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திமுக செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவி சங்கர், ஒன்றிய துணைச் செயலாளர் வாசு தேவன், அச்சன் புதூர் செயலாளர் வெள்ளத்துரை, அகமது மீரான், தமுமுக முகமது கனி, முகுதண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இம்முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் மேலும் இருபது நபர்களுக்கு இலவசமாக கண்களில் லென்ஸ் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் 07-08-2021
சிறந்த இரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழ் பெற்ற குடியாத்தம் மஜக! தலைமை மருத்துவர் சான்றிதழ் வழங்கி பாராட்டு!
வேலூர் மாவட்ட குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பில் தொடர்ந்து மருத்துவ உதவிகளும், அவசர கால இரத்ததான சேவைகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அலுவலகத்தில் சிறந்த இரத்ததான சேவைக்கான சான்றிதழை மனிதநேய ஜனநாயக கட்சிக்கு தலைமை மருத்துவ அதிகாரி ஆர்.ஹேமலதா அவர்கள் வழங்கி பாராட்டினார். சான்றிதழை மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் S.அனீஸ், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் S.M.நிஜ்ஜாமுத்தீன்,மருத்துவ சேவை அணி செயலாளர்கள் சாதிக் பாஷா,முஹம்மத் உசேன் ஆகியோர் பெற்றுக் கொண்டார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 03.08.2021