மனிதநேய ஜனநாயக கட்சியின், திருச்சி மாவட்ட நிர்வாகிகளாக, மஜக மாவட்ட துணைச்செயலாளராக, K.அன்வர் பாட்ஷா த/பெ; M.கமாலுதீன் D31,4-வது தெரு, துரைசாமி புரம், திருச்சி-620001 மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளராக, ஷேக் இப்ராஹிம் த/பெ; காதர் ஒலி துரைசாமி புரம், திருச்சி ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 05.09.2021
பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி
போலிஸ் அதிகாரி சபியாவுக்கு நீதி வேண்டும்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 21 வயதே ஆன பெண் காவல்துறை அதிகாரியான #சபியா அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே துடிப்புடன், நேர்மையாக பணியாற்றினார் என்றும், ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக இயங்கினார் என்றும் பலரும் அவரை பாராட்டியுள்ளனர். இந்திலையில் அவர் மர்மமான முறையில் கடத்தப்பட்டு வெட்டுக் காயங்களுடன், மார்பகங்கள் அறுக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்திய தலைநகரில் ஒரு #பெண்_போலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுள்ள கொடுரத்தை நினைத்தாலே ஈரல் குலை நடுங்குகிறது. ஆனால் இந்த அராஜக நிகழ்வு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, சாதரணமான ஒரு நிகழ்வாக கடந்து செல்வது போல இருப்பது வேதனையளிக்கிறது. ஒரு பெண் போலிஸ் அதிகாரிக்கே இந்த நிலை எனில், சாதாரண பெண்களின் பாதுகாப்பு இனி என்னவாக இருக்கும் ?என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே சபியாவுக்கு நீதி கேட்டு ஜனநாயக குரல்கள் உரத்து முழங்க வேண்டும். அரசியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் முன்களத்தில் நின்று நீதிக்காக குரல் எழுப்ப வேண்டும். பொதுமக்கள் சமூக வலைதளங்கள் வழியாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். சபியாவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்
மருதநாயகத்துக்கு மணிமண்டபம்.! கவிக்கோ பெயரில் இருக்கை.! தமிழக அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்..!
செப்.04., திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மஜக-வின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயற்குழுவில் பங்கேற்ற பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது... தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது. சமீப காலமாக தமிழக சட்டசபையில் நாகரீகமான முறையில் விவாதங்கள் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைக்கிறோம். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. மக்கள் கவனத்திற்கு வராத விடுதலை தியாகிகளையும் அரசு சிறப்பிக்க வேண்டும். அந்த வகையில் மதுரையை தலைமையிடமாக கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மருதநாயகத்தை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு மதுரையில் நூலக வசதியோடு மணிமண்டபம் கட்ட வேண்டும். தமிழுக்கும், தமிழகத்திற்கும் சிறப்பு சேர்த்த பிரபலங்களில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு, அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் அவரின் பெயரால் நவீன தமிழ் இலக்கியத்திற்கான இருக்கை ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும். சென்னையில் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் பயன்பாடற்ற முறையில் இருக்கிறது. அதை மக்கள் தொடர்போடு இருக்கும் வகையில் அதில்
மஜக கொள்கை விளக்க அணி மாநிலச்செயலாளர் கோவை நாசர் மரணம்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் அண்ணன் கோவை .நாசர் அவர்கள் இன்று காலை மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். சமீபத்தில் உடல் நலிவுற்ற நிலையில் அவரை வீட்டில் சந்தித்தப் போது, மிகுந்த உற்சாகத்துடன் கட்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். அவர் கோவை மாநகராட்சியின் கவுன்சிலராக இருந்த போது எளிமையான அணுகுமுறைகள் காரணமாக அனைவராலும் பாராட்டப் பெற்றார். மஜக தொடங்கப்பட்ட பிறகு தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டு பேரார்வத்துடன் பரப்புரையில் ஈடுபட்டு கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டினார். அதுவே அவரை கட்சியின் கொள்கை விளக்க அணியின் மாநில செயலாளராக உயர்த்தியது. மேடைகளில் கலகலப்பாக பேசி மக்களை ஈர்ப்பதில் கெட்டிக்காரராக வலம் வந்தார். சிரித்த முகத்துடன் அனைவருடனும் பழகிடும் அவரது இழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது. அன்பு மிகுந்த ஒரு மூத்த சகோதரரை நாங்கள் இழந்திருக்கிறோம். அந்த வருத்தம் வாட்டுகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் அவரது பிழைகளை மன்னித்து மறு உலக வாழ்வில் அவரை சிறப்பித்திட பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 03.09.2021
டெல்டா மண்டல மஜக செயற்குழு… வாணியம்படி வசீம் அக்ரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்..
செப் 11., மனிதநேய ஜனநாயக கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் இன்று புறநகர் தஞ்சாவூரில், அய்யம்பேட்டை சாலையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. அப்போது முதல் நிகழ்வாக முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்களுக்கான இரங்கல் தீர்மானத்தை தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் அவர்கள் முன்மொழிந்தார்கள். அதன் பின் அனைவரும் ஒரு நிமிடம் மெளனமாக எழுந்து நின்று துயரை வெளிப்படுத்தினார்கள். பிறகு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், துணைப் பொதுச் செயலாளர் மன்னை. செல்லச்சாமி அவர்களும் வசீம் அக்ரம் அவர்களின் பணிகளை பாராட்டி பேசினர். இரங்கல் தீர்மான விபரம் பின்வருமாறு... மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வாசிம் அக்ரம் அவர்கள் நேற்று படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கஞ்சா வினியோகம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கூலிப்படை மூலம் இப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இவ்விஷயத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் அவரது குடும்பத்திற்கு 20 லட்சம்