மருதநாயகத்துக்கு மணிமண்டபம்.! கவிக்கோ பெயரில் இருக்கை.! தமிழக அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்..!

செப்.04., திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மஜக-வின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்தார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயற்குழுவில் பங்கேற்ற பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது கூறியதாவது…

தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது. சமீப காலமாக தமிழக சட்டசபையில் நாகரீகமான முறையில் விவாதங்கள் நடைபெறுகிறது.

இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. மக்கள் கவனத்திற்கு வராத விடுதலை தியாகிகளையும் அரசு சிறப்பிக்க வேண்டும்.

அந்த வகையில் மதுரையை தலைமையிடமாக கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மருதநாயகத்தை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு மதுரையில் நூலக வசதியோடு மணிமண்டபம் கட்ட வேண்டும்.

தமிழுக்கும், தமிழகத்திற்கும் சிறப்பு சேர்த்த பிரபலங்களில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு, அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் அவரின் பெயரால் நவீன தமிழ் இலக்கியத்திற்கான இருக்கை ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

சென்னையில் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் பயன்பாடற்ற முறையில் இருக்கிறது. அதை மக்கள் தொடர்போடு இருக்கும் வகையில் அதில் நூலகம் ஒன்றையும், விழா மண்டபம் ஒன்றையும் அமைக்க வேண்டும்.

ஆகிய மூன்று பொதுக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

இதில் கடைசி இரண்டு கோரிக்கைகளும் கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் அவர் வலியுறுத்தியதாகும்.

மேலும் அவர் உள்ளூர் கோரிக்கைகள் குறித்தும் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

2016 ஆம் ஆண்டு ஆம்பூர் கலவர வழக்குகளை மனிதாபிமான அடிப்படையில் அரசு திரும்பப் பெற வேண்டும், ஆம்பூரில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும், ரெட்டி தோப்பு மேம்பால பணியை உடனடியாக தொடங்க வேண்டும், ஆம்பூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினார்.

பிறகு ஆம்பூரில் மரணமடைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து மஜக தலைமை ஊழியர் கபீரின் தந்தை மறைவையொட்டி அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வில் மாநில துணைச்செயலாளர் அப்சர் சையத், மாநில இளைஞரணி செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அஹமத், மாவட்ட செயலாளர் ஜஹீருல் ஜமா, மாவட்டத் துணைச் செயலாளர் முன்னா, ஆம்பூர் நகர செயலாளர் ஃபிர்தௌஸ், நகர துணை செயலாளர்கள் தப்ரேஸ், ஜூபேர் அஹமது, வசிம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருப்பத்தூர்_மாவட்டம்
04.09.2021