கடலுர் மார்ச்:- 27, கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமிய அடிப்படை உரிமையான ஹிஜாப் அணிய தடைவிதித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
இப்பொதுக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாவட்ட செயலாளர் OR ஜாகிர் ஹுசைன், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், மாவட்ட துணை செயலாளர்கள் கியாசுதீன், முகமது ரபிக், முகமது ரியாஸ, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் AMK முகமது ஹம்ஜா, துபை மாநகர முன்னாள் செயலாளர் சபிக்குர் ரஹ்மான், நகர பொருளாளர் யூனுஸ், நகர நிர்வாகிகள் ஜாஹிர், நூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJKITWING
கடலூர் தெற்கு மாவட்டம்
27.03.2022