TNTJ தலைமையகம்..! மஜக பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் நல்லெண்ண வருகை!

சென்னை.மார்ச்.27.,TNTJ தலைமையகத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இன்று நல்லெண்ண வருகை மேற்கொண்டார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் கேப்டன் செய்யது முகம்மது பாரூக் அவர்களும் வருகை தந்தார்.

அங்கு TNTJ தலைவர் MS.சுலைமான், பொதுச் செயலாளர் அப்துல் கறீம், மாநிலச் செயலாளர் அன்சாரி ஆகியோரை சந்தித்து உரையாடினர்.

இச்சந்திப்பின் போது சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியன குறித்தும் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டது.

இதில் மஜக மாநில துணைச் செயலாளர் முகம்மது அசாருதீன், மாணவர் இந்தியா பொருளாளர் பஷீர், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான், பொருளாளர் ஹாஜா மெய்தீன் ஆகியோரும் உடனிருந்தனர்.

தகவல்,
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-it-WING
மத்தியசென்னை மாவட்டம்
27.03.2022