தொழிற்சங்க கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்..! தொழிலாளர்கள் இணைப்பு நிகழ்வில் மஜக பொ.செ. மு.தமிமுன் அன்சாரி உறுதி..!

சென்னை.மார்ச் 28,இன்று பல்வேறு தொழிற்சங்கங்களிலிருந்து விலகி மஜக சார்பு தொழிற்சங்கமான MJTS-ல் ஏராளமான தொழிலாளர்கள் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிலையில் இணைந்தனர். இந்நிகழ்வில் மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களும் பங்கேற்றார்.

அப்போது தொழிற்சங்கவாதிகள் வலியுறுத்தும் தொழிலாளர்கள் தொடர்பான 10 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற மஜக சார்பில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தொழிலாளர்களிடம் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் மாநில துணைச்செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, அப்சர் சையத், முஹம்மது அஸாருதீன், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அஹமது, தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹீர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்விற்கு சமீபத்தில் MJTS-ல் இணைந்த மண்டல பொறுப்பாளர் இப்ராஹீம் அவர்கள் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-it-WING
தலைமையகம்
28.03.2022