தஞ்சை.அக்.23., தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட டாஸ்மாக் மதுக்கடை முற்றுகைப் போராட்டம் நேற்று 22-10-2017ல் நடைபெற இருந்தது. அறிவித்தபடி காலை பத்து மணிக்கு அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மற்றும் பொதுமக்களும் அண்ணா சிலை அருகில் கூடி மதுக்கடையை முற்றுகையிட கூட்டமாக செல்ல முழக்கமிட்டபடி இருந்தனர். அங்குவந்த வட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். வட்டாட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வரும் 27.10.2017 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் அதுவரை முற்றுகைப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாகவும் போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறு நீலகண்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிகழ்வில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் பேராவூரணி. எஸ்.எம்.எ.சலாம் அவர்களும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மா), தே.மு.தி.க., ம.தி.மு.க., காங்கிரசு. நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், உழைக்கும் மக்கள் கட்சி, கிறித்தவ நல்லெண்ண இயக்கம், சாமானிய சகாக்கள் சங்கம், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் போன்ற இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள்
தமிழகம்
தமிழகம்
மாணவர் இந்தியா நீலகிரி மாவட்ட அமைப்புக் கூட்டம்..!
நீலகிரி.அக்.23.,மாணவர் இந்தியா நீலகிரி மாவட்ட அமைப்புக் கூட்டம் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்கேயன், ஹீசைன், இம்ரான், அஜித் மற்றும் பல்வேறு மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் மாணவர் இந்தியா அமைப்பின் செயல்திட்டங்கள் விளக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. தகவல்; #மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு #நீலகிரி_மாவட்டம்
ஆம்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் எழுச்சி..!
வேலூர்.அக்.23., ஆம்பூரில் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் M.ஜஹிருஸ் ஜமா தலைமையில் மாவட்ட பொறுப்பு குழு S.M. ஷானவாஸ், P.M.ஷபீயுல்லாஹ் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற இந்த நகர செயற்குழுவில் வருகின்ற டிசம்பர்-6 இரயில் நிலைய முற்றுகையிடுவது மற்றும் ஆம்பூர் நகர 36- வார்டுகளிலும் கிளைகள் அமைத்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வின் முடிவில் ஆம்பூர் நகர தமுமுக மருத்துவ அணி செயலாளர் முன்னா என்பவர் தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டார். பின் பல்வேறு சகோதரர் இணைந்து அவர்களுக்கு உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. இதில் மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம் B.Sc, வேலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் முஹம்மத் ஜாபர், வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ரபீக் ரப்பானி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஆம்பூர்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! தென்காசியில் மஜக பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சி
நெல்லை.அக்.22., திருநெல்வேலி மேற்கு மாவட்டம் தென்காசியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று (22_10_17) பெரும் எழுச்சியோடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சி தொடங்கப்பட்ட பிறகு இம்மாவட்டத்தில் புளியங்குடிக்கு அடுத்தப்படியாக தற்போது இரண்டாவதாக தென்காசியில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதன் மூலம் மஜகவின் மக்கள் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஊரெங்கும் மஜக கொடிகள், வரவேற்பு பதாகைகள், போஸ்டர்கள், பேனர்கள் என பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில், தமுமுகவின் தலைமைக்கழகப் பேச்சாளர் புளியங்குடி.செய்யது அலி தன்னை மஜகவில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது, இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில துணைப் பொதுச்செயலாளர் மன்னை.செல்லச்சாமி, மாநில செயலாளர் தைமிய்யா உள்ளிட்டோர் ஆற்றிய உரைகளை திரளான மக்கள் கூட்டத்தை தாண்டியும், ஆங்காங்கே நின்று கொண்டிருந்த மக்கள் பேரார்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா, கோவை சுல்தான், மாநிலத் துணைச் செயலாளர்கள் கோவை.பஷீர், தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் வானவில் காதர், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர்
மாணவர் இந்தியா பரங்கிப்பேட்டை நகர மாணவர்கள் கலந்துரையாடல்..
கடலூர்.அக்.22., கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் மாணவர் இந்தியாவின் மாணவர் சந்திப்பு மாவட்ட செயலாளர் முஸரப் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் ரியாஸ் முன்னிலை வகித்தார். இதில் மாணவர் இந்தியா செயல் திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை பற்றியும், பரங்கிப்பேட்டை நகரத்தில் அமைப்பின் கட்டமைப்பு பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது. தகவல்; #மாணவர்_இந்தியா_ஊடக_பிரிவு #கடலூர்_தெற்கு