தஞ்சை.அக்.23., தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட டாஸ்மாக் மதுக்கடை முற்றுகைப் போராட்டம் நேற்று 22-10-2017ல் நடைபெற இருந்தது.
அறிவித்தபடி காலை பத்து மணிக்கு அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மற்றும் பொதுமக்களும் அண்ணா சிலை அருகில் கூடி மதுக்கடையை முற்றுகையிட கூட்டமாக செல்ல முழக்கமிட்டபடி இருந்தனர். அங்குவந்த வட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
வட்டாட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வரும் 27.10.2017 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் அதுவரை முற்றுகைப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாகவும் போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறு நீலகண்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நிகழ்வில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் பேராவூரணி. எஸ்.எம்.எ.சலாம் அவர்களும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மா), தே.மு.தி.க., ம.தி.மு.க., காங்கிரசு. நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், உழைக்கும் மக்கள் கட்சி, கிறித்தவ நல்லெண்ண இயக்கம், சாமானிய சகாக்கள் சங்கம், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் போன்ற இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT-WING
#பேராவூரணி_தஞ்சை_வடக்கு_மாவட்டம்
22-10-2017