நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட மகிழியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை நிர்வாகம் புதிதாக அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இக்கூட்டம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது தலைமையிலும், திருப்பூண்டி கிளை செயலாளர் T.ஹாஜா முயீனுதீன் மற்றும் திருப்பூண்டி நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைப்பெற்றது. தொடர்ந்து மகிழி புதிய கிளை நிர்வாகிகளாக அப்துல் மஜீது, முகம்மது சித்திக், அபுதாஹிர், அசாருதீன் உள்ளிட்டோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இதில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்று படிவங்களை பூர்த்தி செய்து தங்களை மஜகவின் புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம். 22.07.2021
புதிய கிளை
விழுப்புரம் மஜக அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி..! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்பு..!!
ஜன.13, விழுப்புரத்தில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியும், கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் கலந்து கொண்டு மஜக கொடியை ஏற்றி வைத்து மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று மஜக அட்டைகளை மாநில பொருளாளர் வழங்கினார். இந்நிகழ்வுகளில் மாவட்ட செயலாளர் ரிஸ்வான், பொருளாளர் செளகத் அலி , மாவட்ட துணைச் செயலாளர் செஞ்சி பைரோஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் அக்பர், விழுப்புரம் நகர பொருளாளர் ஜாபர் சேட், நகர துணைச்செயலாளர்கள் அஸ்மத்துல்லாஹ், பாரி , ஜபருல்லாஹ் , நகர MJVS மன்சூர் அலி, நகர MJTS நசீர், செஞ்சி அப்பம்பட்டு கிளை செயலாளர் ஜஹாங்கீர், புளியம்பட்டு கிளை செயலாளர் முபாரக், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் அப்பாஸ், கள்ளக்குறிச்சி பள்ளிவாசல் ஜமாத் தலைவர்கள், திருக்கோயிலூர் நகர செயலாளர் சாதிக் பாட்ஷா உள்பட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #விழுப்புரம்_மாவட்டம்.
திருவாரூர் மாவட்டம் பாமணியில் மஜக கிளை உதயம்!
ஜன.12, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பாமணியில் மஜக கிளை துவங்கப்பட்டது. இக்கூட்டம் மாவட்ட துணை செயலாளர் செய்யது மீரான் தலைமையில் நடைபெற்றது. பாமணி கிளையின் புதிய நிர்வாகிகள் செயலாளர் மன்சூர் அலி கான் மற்றும் கிளை பொருளாளர் அஜ்மல் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கட்டிமேடு ஆசிப், கட்டிமேடு நிர்வாகி யாசிர், பாமணி கிளை நிர்வாகிகள் முகம்மது இப்ராகிம், முஸ்தபா, சிராஜிதீன், இம்ரான், ரியாஸ், ஜெஸிர் உள்ளிட மஜகவினர்கள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 11.01.2021
இளையான்குடி புதூரில் MJTS கிளை திறப்பு விழா..!!மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது திறந்து வைத்தார்..!!
நவ.13., சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூரில் 12-12-2020 அன்று மாலை 05.00 மணியளவில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) ஆட்டோ நலச்சங்கத்தின் புதிய கிளை திறப்பு நிகழ்ச்சி T.K.பசீர் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது. மீரான் கனி வரவேற்புரை நிகழ்த்தி, புதூர் தைக்கா பள்ளிவாசல் இமாம் இப்ராஹிம் பைஜி அவர்கள் துவாவை ஒதி நிகழ்ச்சியை தொடங்கினார்கள். இந்நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றிவைத்து, அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் முஹம்மது சைபுல்லாஹ், சிவகங்கை மாவட்ட செயலாளர் சல்லை காஜா மொய்தீன், நகர செயலாளர் உமர் கத்தாப், மற்றும் ஜமால் முகம்மது, நைனார் முஹம்மது உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை புதூர் கிளை நிர்வாகிகள் மற்றும் அஜ்மல் கான் மிக சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள். MJTS நகர தலைவர் செக்கடி அத்தான் காஜாமைதீன் நன்றியுரை நிகழ்த்தினார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சிவகங்கை_மாவட்டம். 12.12.2020
நாகை தெத்தியில் புதிய கிளை மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி!
நாகை.நவ.01, நாகை ஒன்றியம் தெத்தியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை நிர்வாகம் கட்டமைக்கப்பட்டு கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் ஜலாலுதீன் தலைமையில் நடைப்பெற்றது. மஜக கொடியினை தலைமை செயற்குழு உறுப்பினர் திருப்பூண்டி சாகுல் ஏற்றினார். மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் முழக்கங்களை எழுப்பினார். தொடர்ந்து நடைப்பெற்ற கூட்டத்தில் மஜகவில் புதிதாக இணைத்து கொண்டவர்களுக்கு முதற்கட்டமாக அடையாள அட்டைகளை மாவட்ட துணைச் செயலாளர்கள் முன்சி யூசுப்தீன், சாகுல் ஹமீது @ கண்ணுவாப்பா ஆகியோர் வழங்கினர். இக்கூட்டத்தில், மாவட்ட அணி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் தெத்தி மஜகவினர் திரளாகப் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #MJK2021 #நாகை_மாவட்டம்.