சென்னை.ஆக.29., #மாணவர்_இந்தியா அமைப்பின் சார்பாக வசூல் செய்த வெள்ள நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களிடம் மாணவர் இந்தியா பொறுப்பாளர் தைமிய்யா மற்றும் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணைச்செயலாளர் பஷீர் அஹமது ஆகியோர் ஒப்படைத்தனர். தகவல்; #வெள்ள_நிவாரண_பணி_குழு #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையாகம் 29.08.2018
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
திருப்பூரில் மாணவர் இந்தியா ஆலோசனை கூட்டம்..!
திருப்பூர்.ஆக.16., திருப்பூர் மாவட்ட மாணவர் இந்தியா ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது . இந்த கூட்டத்திற்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நவ்ஃபில் ரிஸ்வான் தலைமை தாங்கினார். மாணவர் இந்தியா மாவட்ட துணைச்செயலாளர் ஜாபர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ஹைதர்அலி. மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது மாவட்ட துணைச் செயலாளர் லியாகத் அலி. வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அபு. வ.அணி மா.து.செயலாளர் ரஹ்மான். இளைஞரணி மாவட்ட செயலாளர் அசாருதீன். இ.அணி.மா.து.செயலாளர்.அபுதாஹீர். ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட மாணவர் இந்தியா சார்பாக அதிகமான மாணவர்களை சமூகநலப் பணிகளில் ஈடுபட செய்வது குறித்தும், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை சிராஜ் மஹாலில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் பங்குபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், அடுத்த மாதம் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உள்ளிட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கு பெறும் மாபெரும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பை செலுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட அலுவலகத்தை பகுதி நேர நூலகமாக மாற்றவேண்டும்
மாணவர் இந்தியா வளர்ச்சி குறித்து ஆலோசனை!
சென்னை.ஜூலை.25., மஜக தலைமையகத்தில் நேற்று மாணவர் இந்தியாவின் எதிர்கால வியூகங்கள் குறித்து கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அமைப்பின் அடுத்தக்கட்ட செயல்திட்டம்,பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை மாநில செயலாளர் அஸாருதீன், மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹமது ஆகியோருக்கு மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம்.தாஜீதீன், N.A.தைமிய்யா மற்றும் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அணீஸ், இன்ஜீனியர் சைபுல்லாஹ், பல்லாவரம் ஷஃபி ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு
தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட MJTS ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..!
திருவொற்றியூர்.மே.25., தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்கம் (MJTS) ஐ.ஓ.சி வாகன ஓட்டுநர்கள் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைப்பெற்றது. இதனையொட்டி திருவொற்றியூர் பகுதி #MJTS செயலாளர் பி.ராஜா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) திருவொற்றியூர் பகுதி செயலாளர் எச்.காதிர் உசேன் பகுதி பொருளாளர், எம்.எஸ்.காஷிம்ஷெரிப், பகுதி துணை செயலாளர் ஜே.ஜீலானி, பகுதி IT Wing செயலாளர் எ.பேரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாசர், மாவட்ட பொருளாளர் எல்.ஜாஃபர் சாதிக், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம்.நிஜாம் பாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மஜக மாநில துணைச்செயலாளர் J.ஷமீம் அஹமது, மாணவர் இந்தியா மாநில செயலாளர் அ.அஸாருதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் தொழிலாளர்கள், பொதுமக்கள், கட்சியினர் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 24.05.2018
இளைஞர்கள் மாணவர்களை வெகுவாக ஈர்த்த மஜக..!
திருப்பூர். மே.20., திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பி.கே.ஆர் காலணி புஸ்பா நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் தங்களை சேவை அரசியலில் ஈடுபட , மஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் #இ_ஹைதர்_அலி அவர்கள் முன்னிலையில் தங்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யில் இணைத்துக்கொண்டனர். கல்லூரி மாணவர்கள் அனைவரும் மஜகவின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா அமைப்பில் இணைந்து செயலாற்ற உறுதி பூண்டனர். இந்த நிகழ்வின் போது மஜக மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹ்மது, மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், ஆசீக், பெரியதோட்டம் அபு, ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருப்பூர்_மாவட்டம் 20-05-2018