மதுரை.மே.31. மதுரை வடக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) சார்பில் நோன்பு துறப்பு எனும் #இஃப்தார்_நிகழ்ச்சி ஒத்தக்கடையில் உள்ள பிரபல தனியார் உணவு விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த சிறப்புவாய்ந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச்செயலாளர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் சசிக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். ஒத்தக்கடை ஜமாத்தார்களும் நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த #மஜக மாநில #துணைப்பொது_செயலாளர்கள் மண்டலம் ஜெய்னுலாப்தீன் மற்றும் மன்னை.செல்லச்சாமி ஆகியோர் சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துரை வழங்கினார்., மாநில துணைச்செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளர் சுலைமான் நன்றியுரையாற்றினார். மதுரையில் மக்கள் பணியாற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக சமுதாய அமைப்புகள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து நல்லிணக்க திருவிழாவாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இதில் மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் பிரித்திவி ராஜ், ராஜேஸ் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் உலமா பெருமக்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள் என பெரும்திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம். 30.05.2018
மஜக மருத்துவ சேவை அணி
மஜக மருத்துவ சேவை அணி
மஜக கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்!
கோவை.மே.14., கோவை மாநகர் மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் #MH_அப்பாஸ், தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச் செயலாளர் AK.சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் TA.நாசர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாநில செயற்குழு உறுப்பினர் ஆனமலை காஜா, மாவட்ட துணை செயலாளர்கள் PM.முகம்மதுரபீக், முஸ்தபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், துணை செயலாளர்கள் சபீர், பிரோஸ், அன்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்று சூழல் அணி மாவட்ட துணை செயலாளர் அபு, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜீஸ், இப்ராஹீம்( EBR), அக்கீம் (அர்னால்ட்) பகுதி நிர்வாகிகள் ஹாருண்ரஷீது, காதர், சமீர், முத்தலி, அப்பாஸ், ரஹ்மத்துல்லா, அபு, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கரும்புகடை பகுதியை சேர்ந்த சகோ சிராஜ் மற்றும் பல சகோதரர்கள் துணை பொதுச் செயலாளர் முன்னிலையில்
மஜக கோவை மாவட்ட மருத்துவஅணி நிர்வாகக்குழு கூட்டம்!
கோவை.மே.04., #மனிதநேய_ஜனநாயக_கட்சி கோவை மாநகர் மாவட்ட #மருத்துவ_அணி நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் அபு தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம், பகுதி நிர்வாகிகள் அசாருதீன், அப்துல்ஹக்கீம், மற்றும் கிளை மருத்துவ அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. கோவை மாவட்ட மருத்துவஅணி சார்பாக 3மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு பகுதியை தேர்வு செய்து மருத்துவ முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது., 2. கோவை மாவட்டத்தில் விரைவாக மருத்துவ சேவைமையம் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. 3. பொது மக்களுக்கு அவசர கால விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு பெற்று தருவது என தீர்மானிக்கப்பட்டது. 4. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாவட்ட மருத்துவ அணி சார்பாக பிரம்மாண்டமான இரத்ததான முகாம், பல்துறை மருத்துவ முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 5. கோவை மாவட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு மாதம் ஒரு முறை மருத்துவர் மூலம் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 6. கோவை மாவட்ட மருத்துவஅணி சார்பில் இரத்ததான சேவைக்காக மொபைல் ஆப் (செயலி) தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 04.05.18
திருச்சியில் மஜக நிர்வாக குழு மற்றும் சிறப்பு நிர்வாககுழு கூட்டம்..!
திருச்சி.ஜன.08., திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பெமினா ஹோட்டலில் நேற்று (07.01.2018) காலை மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாககுழு கூட்டமும், மதியம் முதல் இரவு வரையில் சிறப்பு நிர்வாககுழு கூட்டமும் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, தலைமை நிர்வாககுழு உறுப்பினர்கள் JS.ரிஃபாயி ரஷாதி, AS.அலாவுதீன், துணை பொதுச்செயலாளர்கள் கோவை சுல்தான் அமீர், மதுக்கூர் ராவுத்தர்ஷா, மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் NA.தைமியா, H.ராசுதீன், நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முகம்மது, மாநில துணைச் செயலாளர்கள் கோவை பசீர், Er.சைபுல்லாஹ், புளியங்குடி செய்யது அலி, பல்லாவரம் சபி, ஈரோடு பாபு ஷாஹின்ஷா, புதுமடம் அனீஸ், திருமங்கலம் சமீம் ஆகிய மாநில நிர்வாகிகள் இருந்தனர். மேலும் அணி நிர்வாகிகளான விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆரோக்கியமான பல கருத்துக்களை கொண்டு கட்சியின் வளர்ச்சினை பற்றி நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 07.01.18
மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!
கோவை.டிச.22., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டசெயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நேற்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா இஷாக், மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜாபர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA. பைசல், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மருத்துவ அணி மாவட்டசெயலாளர் அபு, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாநகர்_மாவட்டம் 21.12.17