கோவை.மே.04., #மனிதநேய_ஜனநாயக_கட்சி கோவை மாநகர் மாவட்ட #மருத்துவ_அணி நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் அபு தலைமையில் நடைபெற்றது.
இதில் மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம், பகுதி நிர்வாகிகள் அசாருதீன், அப்துல்ஹக்கீம், மற்றும் கிளை மருத்துவ அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. கோவை மாவட்ட மருத்துவஅணி சார்பாக 3மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு பகுதியை தேர்வு செய்து மருத்துவ முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.,
2. கோவை மாவட்டத்தில் விரைவாக மருத்துவ சேவைமையம் தொடங்க தீர்மானிக்கப்பட்டது.
3. பொது மக்களுக்கு அவசர கால விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு பெற்று தருவது என தீர்மானிக்கப்பட்டது.
4. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாவட்ட மருத்துவ அணி சார்பாக பிரம்மாண்டமான இரத்ததான முகாம், பல்துறை மருத்துவ முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
5. கோவை மாவட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு மாதம் ஒரு முறை மருத்துவர் மூலம் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
6. கோவை மாவட்ட மருத்துவஅணி சார்பில் இரத்ததான சேவைக்காக மொபைல் ஆப் (செயலி) தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
04.05.18