கோடை விடுமுறையில் பயிற்சி வகுப்புகளை அனுமதிக்க கூடாது..! மஜக தமிழக அரசுக்கு கோரிக்கை..!!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..)

‌பள்ளிக்கூட மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பது கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக இருக்கிறது. பாட சிந்தனைகள், புத்தக சுமைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு மே மாதம் முழுவதையும் தங்களின் மகிழ்ச்சியான பொழுது போக்குக்காக ஒதுக்குகிறார்கள்.

‌ குடும்பத்துடன் சுற்றுலா செல்வது, உறவினார்களின் இல்லங்களுக்கு சென்று தங்குவது, விளையாட்டுகளில் ஈடுபடுவது, விழாக்களில் பங்கேற்பது என மனதை உற்சாகப்படுத்திக் கொள்கிறார்கள் .

‌ இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் மே மாதத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு #சிறப்பு_பயிற்சி_வகுப்பு-களை நடத்துகிறார்கள். இந்த போக்கு இப்போது அரசு பள்ளிகளிலும் பரவியிருக்கிறது.

‌எந்த நோக்கத்திற்காக மே மாத கோடை விடுமுறை அளிக்கப்படுகிறதோ. அதற்கு எதிராக சில பள்ளிக்கூடங்கள் செயல்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. ‌இதை பெற்றோர்கள் விரும்பவில்லை மாணவ, மாணவிகளும் விரும்பவில்லை.

‌எனவே, கடும் கோடை வெயிலில் பிள்ளைகளுக்கு மன சோர்வை ஏற்படுத்தும், சிறப்பு பயிற்சி வகுப்புகளை அரசு பள்ளிக்கூடங்களும், தனியார் பள்ளிக்கூடங்களும் நடத்த தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்.

‌சிறப்பான முறையில் செயல்படும் #பள்ளிக்_கல்வித்_துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் திரு.செங்கோட்டையன் அவர்கள், இது குறித்து தமிழக முதல்வருடன் பேசி உரிய அறிவிப்பினை வெளியிட வேண்டும் என கேட்டு கொள்கிறேம்.

இவன்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
‌ 04/05/2018