சென்னை. ஏப்.16., காஷ்மீரில் 'இந்து ஏக்தா மன்ஜ்' அமைப்பை சேர்ந்தவர்கள் #ஆசிபா என்ற 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து இந்தியா முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் #நீதிகேட்டு_போராட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்பாட்டத்தில், ஆசிபாவுக்கு நீதி கேட்டு மக்கள் முழங்கியபோது , உணர்ச்சி வசப்பட்ட ஒரு போலீஸ்காரர் அவரும் முழுக்கம் எழுப்பி கலங்கினார். பத்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆசிபாவுக்கு நீதி கேட்டு பதாகைகளை தூக்கிய படியே நின்றனர். அதில்'அடுத்தது நாங்களா மோடி' என்ற வாசகம் பத்திரிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. சாலை வழியே சென்ற பொது மக்களும் அப்படியே நின்று ஆசிபா படம் பொறித்த பதாகைகளை பார்த்து பதைத்து போய் ஒரு நிமிடம் நின்ற பிறகே சென்றனர். வந்திருந்த பல்வேறு சமூக மக்களும் சோகம் கப்பிய முகத்தோடு நின்றனர். இதில் தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு MLA, இதர பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் பொதுச்செயலாளர் வீரவன்னியராஜா, சமாஜ்வாடி கட்சி தலைவர் டெல்டா விஜயன், பாரத மக்கள் இயக்கத்தை சேர்ந்த உமாராணி, மஜக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் A.S அலாவுதீன், மாநில
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
காவிரி போராட்டக்காரர்களை விடுதலை செய்க ! தமிழக முதல்வருடன் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நேரில் சந்திப்பு!
சென்னை.ஏப்.16., இன்று (16-04-2018) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், 20 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது காவிரி உரிமைக்காக போராடிய மஜக மாநில பொருளாளர் SS. ஹாரூன் ரசீது மற்றும் நிர்வாகிகள் 6பேர்கள் உட்பட போராட்டக்காரர்கள் அனைவர் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும், அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஜுன் 12 தேதிக்குள் குறுவை சாகுபடிக்கு காவிரி தண்ணீர் தேவை என்பதால், தமிழக அரசின் சார்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும், வலியுறுத்தினார். மேலும் தூத்துக்குடி ஸ்டர்லைட் எதிர்ப்பு போராட்டம், நியுட்ரினோ திட்ட எதிர்ப்பு போராட்டம் ஆகியவை குறித்தும், அதில் தமிழக அரசு மக்கள் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். தங்களது கருத்துகளை நிச்சயம் பரீசீலிப்பதாக தமிழக முதல்வர் பதிலளித்தார். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையாகம்_சென்னை 16.04.2018
சிறையில் மஜக நிர்வாகிகளை சந்தித்தார்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி!
சென்னை. ஏப்.16., இன்று காவிரி போராட்டத்தில் சிறை சென்ற மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது உள்ளிட்ட 7 மஜக நிர்வாகிகளை இன்று புழல் சிறைக்கு சென்று, பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சந்தித்து பேசினார். அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், மாநில துணைச் செயலாளர் ஷமிம் ஆகியோர் உடன் சென்றனர். சட்ட நடவடிக்கைகள் மூலம் விரைவில் விடுதலைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதை கூறினார். அதிகபட்சமாக மூன்று நாட்களுக்குள் விடுதலை சாத்தியமாகும் என்பதையும் கூறினார். சிறையில், அதிகாரிகள் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், சிறையில் நாங்கள் உற்சாகமாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர். அதனை அடுத்து மாநிலச் செயலாளர்கள் தைமிய்யா, நாச்சிகுளம் தாஜூதீன், IT WING மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ் உள்ளிட்டோரும் சிறையில் சந்தித்து பேசினர். அதன் பிறகு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள், காவிரி போராட்டத்திற்காக சிறை சென்ற மஜக பொருளாளர் S.S. ஹாரூன் ரசீது உட்பட 8 மஜக நிர்வாகிகள், மேலும் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்
மஜக தேனி மாவட்டம் சார்பில், மாநில பொருளாளர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!
தேனி.ஏப்.26., காவிரி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரசீத் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள்மீது தடியடி நடத்தி பொய் வழக்கின் கீழ் கைது செய்த காவல்துறையை வண்மையாக கண்டித்தும், பொய் வழக்கை திரும்பபெற்று மஜகவினர் உட்பட அணைவரையும் விடுதலைசெய்ய கோரியும், தேனி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக உத்தமபாளையம் பைபாஸில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ரியாஸ் தலைமையேற்க்க, மாவட்ட பொருளாளர் சேக் பரீத் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் கம்பம் கலில், பாளையம் தமீமுன் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர் கரீம் ஆகியோர் முன்னிலைவகுத்தனர். பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் E.அபுதாஹிர் அவர்களும், முஸ்லிம் யூத் லீக் தேனி மாவட்ட தலைவர் முகம்மது இப்ராஹீம் உஸ்மானி அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்களும் கண்டன உரையாற்றினார்கள். இறுதியாக கம்பம் நகர செயலாளர் அஜ்மீர் நன்றியுரையாற்றினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தேனி_மாவட்டம் 15.04.18
காவிரி விவகாரம் நெய்வேலியில் ஊர்மக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உண்ணாவிரதம்..! மாணவர் இந்தியா பங்கேற்பு..!!
நெய்வேலி.ஏப்.15., #காவிரி_மேலாண்மை_வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள பெறியாக்குறிச்சி ஊர் மக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டத்தில் #மாணவர்_இந்தியா மாவட்ட செயலாளர் A.ரியாஸ் ரஹ்மான் தலைமையில் பங்கேற்று காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், காவிரிக்காக போராடிய போராளிகளை பொய் வழக்கு சுமத்திய தமிழக காவல் துறையை கண்டித்தும் கண்டன உரையை நிகழ்த்தினார். மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்கள் கலந்து கொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு புரட்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்தார். இதில் மாணவர் இந்தியா நகர துணை செயலாளர் சதாம் உசேன், ரஹ்மான், நகர நிர்வகிகள் அமிர், அன்சர், ரஷித் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #ஊடக_பிரிவு_மாணவர்_இந்தியா 15.04.2018