You are here

காவிரி விவகாரம் நெய்வேலியில் ஊர்மக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உண்ணாவிரதம்..! மாணவர் இந்தியா பங்கேற்பு..!!

நெய்வேலி.ஏப்.15., #காவிரி_மேலாண்மை_வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள பெறியாக்குறிச்சி ஊர் மக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.

இப்போராட்டத்தில் #மாணவர்_இந்தியா மாவட்ட செயலாளர் A.ரியாஸ் ரஹ்மான் தலைமையில் பங்கேற்று காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், காவிரிக்காக போராடிய போராளிகளை பொய் வழக்கு சுமத்திய தமிழக காவல் துறையை கண்டித்தும் கண்டன உரையை நிகழ்த்தினார்.

மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்கள் கலந்து கொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு புரட்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதில் மாணவர் இந்தியா நகர துணை செயலாளர் சதாம் உசேன், ரஹ்மான்,
நகர நிர்வகிகள் அமிர், அன்சர், ரஷித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#ஊடக_பிரிவு_மாணவர்_இந்தியா
15.04.2018

Top