You are here

மஜக தேனி மாவட்டம் சார்பில், மாநில பொருளாளர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தேனி.ஏப்.26., காவிரி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரசீத் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள்மீது தடியடி நடத்தி பொய் வழக்கின் கீழ் கைது செய்த காவல்துறையை வண்மையாக கண்டித்தும், பொய் வழக்கை திரும்பபெற்று மஜகவினர் உட்பட அணைவரையும் விடுதலைசெய்ய கோரியும், தேனி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி
சார்பாக உத்தமபாளையம் பைபாஸில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் ரியாஸ் தலைமையேற்க்க, மாவட்ட பொருளாளர் சேக் பரீத் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் கம்பம் கலில், பாளையம் தமீமுன் அன்சாரி,
மாநில செயற்குழு உறுப்பினர் கரீம் ஆகியோர் முன்னிலைவகுத்தனர்.

பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநில செயலாளர் E.அபுதாஹிர் அவர்களும், முஸ்லிம் யூத் லீக் தேனி மாவட்ட தலைவர் முகம்மது இப்ராஹீம் உஸ்மானி அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்களும் கண்டன உரையாற்றினார்கள்.

இறுதியாக கம்பம் நகர செயலாளர் அஜ்மீர் நன்றியுரையாற்றினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தேனி_மாவட்டம்
15.04.18

Top