மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட விவசாய அணி சார்பாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதை கண்டித்தும், ஒன்றிய அரசு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நெல்லை வண்ணார்பேட்டை செப்பாண்டியன் பாலத்தின் கீழ் ஆர்பாட்டம் நடைபெற்றது. நிகழ்விற்கு நெல்லை மாவட்ட விவசாய அணி செயலாளர் நெல்லை ஜாகிர் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் வீ.கே.புரம்.செய்யது அலி, மாவட்ட அணி நிர்வாகிகள் ராபியாசேக், பத்தமடை கனி, ஹபிபுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் கண்டன உரையாற்றினார், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, ஆதிதமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். மேலும் கோதர், புல்லட்கனி, ஐடிஐ.சங்கர், சம்சு, ஆதிமூலம், நாகராஜன், பீர், பாலா உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லைமாவட்டம் 08-08-2021
மஜக ஆர்ப்பாட்டங்கள்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து MJTS அண்ணாநகர் பகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.! மஜக துணை பொதுச்செயலாளர் தைமிய்யா மாநிலசெயலாளர் சீனிமுகம்மது பங்கேற்பு..!!
சென்னை.ஜன.31., மத்தியில் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பன் மடங்காக அதிகரித்துள்ளது, அதன் அடிப்படை காரணம் பெட்ரோல் டீசல், விலை ஏற்றம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை அமலுக்கு வந்த பிறகு நாள்தோறும் 10 காசுகள், 12 காசுகள் என பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே வந்து வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. இதை கண்டித்து மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS), மத்திய சென்னை மேற்கு மாவட்டம், அண்ணாநகர் பகுதி சார்பாக இன்று அரும்பாக்கம் MMDA பால் பூத் அருகில் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் NA.தைமிய்யா, மாநிலச் செயலாளர் ஜெ.சீனி முஹம்மது, மாநிலத் துணைச் செயலாளர் ஷமீம் அஹமது, MJTS தலைவர் சலிமுதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். மேலும் மஜக மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் அன்வர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர்
டெல்லியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் விவசாயிகள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் மஜக ஆர்ப்பாட்டம்!!
ஜனவரி 31, டெல்லியில் விவசாயிகள் மீது நடைப்பெற்ற அரச வன்முறைகளை கண்டித்தும், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை முழுமையாக பெற்றுக் கொடுக்க கோரியும், தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரியும் நான்கு விவசாய கோரிக்கைகளை முன் வைத்து மயிலாடுதுறை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. முத்து வக்கீல் சாலையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி விவசாய அணி மாவட்ட செயலாளர் Y.H.ஹாஜா சலீம் தலைமை ஏற்க மாவட்ட துணைச் செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான் முழக்கங்களை எழுப்பி தொடங்கி வைத்தார். இப்போராட்டத்தில் மாநில விவசாய அணியின் செயலாளர் பேரை. அப்துல் சலாம் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் M.H.ஷாஜஹான், மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டல துணைச் செயலாளர் மாயவரம் ஷபீர் அஹமது, மாவட்ட துணை செயலாளர்கள் நீடூர் மிஸ்பாஹுதீன், தைக்கால் ஆசேன் அலி, வேலம்புதுக்குடி இப்ராஹிம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அமீருல் அஸ்லம் ஆகியோர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் அஜ்மல் உசேன், மனிதநேய தொழிற் சங்க மாவட்ட செயலாளர் நீடூர்
டெல்லியில் அமைதி வழியில் போராடிய விவசாயிகளின் மீதான தாக்குதலை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!
ஜன.29., புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் பெண்கள் குழந்தைகள் என 62 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக குடியரசு தினமான 26 ஆம் தேதிய்ன்று அன்று விவசாயிகள் பேரணி நடைபெற்றது விவசாயிகளின் அமைதி பேரணியில் மத்திய மோடி அரசின் காவல் துறை கடும் தாக்குதலை நடத்தியது , தாக்குதலை கண்டித்தும், மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்தும். மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் VMT. ஜாபர், அவர்கள் தலைமையில் மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டின் பிரதான சாலையான பவானி ஆற்றுப் பாலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் சாலை மறியலும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்கள் எழுப்ப பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் SN சேட் வரவேற்புரை நிகழ்த்தினார், மாநில செயற்குழு உறுப்பினர் காஜா மைதீன், மாவட்ட துணைச் செயலாளர் M.சுல்தான், முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சி மாவட்ட செயலாளர் அசனார், அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராடுவோம்! நாகை மஜக ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
ஜனவரி. 28, டெல்லியில் விவசாயிகள் மீது நடைப்பெற்ற அரச வன்முறைகளை கண்டித்தும், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை முழுமையாக பெற்றுக் கொடுக்க கோரியும், தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரியும் நான்கு விவசாய கோரிக்கைகளை முன் வைத்து நாகை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தலைமை தபால் நிலையம் எதிரே நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் தலைமை ஏற்றார். இதில் மாநில துணைச்செயலாளர் நாகை முபாரக் முழக்கங்களை எழுப்பி தொடங்கி வைத்தார். இதில் காவிரி விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் தலைவர் காவேரி தனபாலன், மார்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் நாகை மாலி EX.MLA, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமதாஸ், கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் தமிழ் செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிறைவாக பேசிய பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசும் போது, விவசாயிகள் 65 நாட்களாக போராடி வருகிறார்கள். இதுவரை 64 விவசாயிகளை