பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து MJTS அண்ணாநகர் பகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.! மஜக துணை பொதுச்செயலாளர் தைமிய்யா மாநிலசெயலாளர் சீனிமுகம்மது பங்கேற்பு..!!


சென்னை.ஜன.31.,

மத்தியில் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பன் மடங்காக அதிகரித்துள்ளது, அதன் அடிப்படை காரணம் பெட்ரோல் டீசல், விலை ஏற்றம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை அமலுக்கு வந்த பிறகு நாள்தோறும் 10 காசுகள், 12 காசுகள் என பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே வந்து வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து நிற்கிறது.

இதை கண்டித்து மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS), மத்திய சென்னை மேற்கு மாவட்டம், அண்ணாநகர் பகுதி சார்பாக இன்று அரும்பாக்கம் MMDA பால் பூத் அருகில் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் NA.தைமிய்யா, மாநிலச் செயலாளர் ஜெ.சீனி முஹம்மது, மாநிலத் துணைச் செயலாளர் ஷமீம் அஹமது, MJTS தலைவர் சலிமுதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.

மேலும் மஜக மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் அன்வர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் கடாபி, மாவட்டத் துணைச் செயலாளர் பக்கீர் மைதீன் ஆகியோர் கண்டன கோஷம் எழுப்பினர்.

இந்நிகழ்வில் பகுதி பொறுப்பாளர்கள் அஸ்லம் பாஷா, நாகூர் மைதீன், பகுதி பொருளாளர் நூர்ஜஹான், துணைச் செயலாளர்கள் வரதராஜ், பாலசுப்பிரமணி உள்ளிட்ட திரளான மனிதநேய சொந்தங்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#மத்தியசென்னை_மேற்கு_மாவட்டம்
31-01-2021