ஜனவரி 30,
கோவையில் மஜக சார்பு தொழிற்சங்கமான MJTS சார்பில் புதிய பாதை மீட்டர் ஆட்டோக்கள் 200 க்கும் மேற்பட்டவை கோவை மக்களிடம் நற்பெயரை ஈட்டி வருகின்றன.
மீட்டர் கட்டணம் மட்டுமே வாங்குவது, பாதுகாப்பான சேவை, ஆகியவற்றுக்கு தொடர் பாராட்டுகளை மக்களிடம் பெற்று வருகிறது.
அந்த வரிசையில் காளிதாஸ் என்ற ஒட்டுனர்,, ஒரு பயணி தவற விட்டுச் சென்ற 10, பவுன் நகைகளை மீட்டுக் கொடுத்தார், அது போல் நூர்தீன், என்ற ஓட்டுனர் பயணி ஒருவர் ஆட்டோவில் தவறவிட்ட செல்போனை அவரிடம் ஒப்படைத்தார்.
இதை MJTS புதிய பாதை கால் டாக்ஸி திறப்பு விழாவில் சுட்டிக்காட்டி பேசிய, பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், நேர்மையை வெளிப்படுத்தி இவர்கள் நம் தொழிற்சங்கத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள் என பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
30.01.2021