பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLAவுடன் கோவை SIO மாணவர்கள் சந்திப்பு!


ஜனவரி 31,

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை , கோவை மாநகர SIO மாணவர்கள் சந்தித்து உரையாடினர்.

கல்வி, இதழியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் அவர்கள் ஆற்றி வரும் பணிகளை விவரித்தனர்.

அவர்களின் பணிகளை பாராட்டிய பொதுச் செயலாளர் அவர்கள் , நாடு தழுவிய அளவில் SIO ஆற்றி வரும் பணிகளை,
தான் கவனித்து வருவதாகவும் , அது நம்பிக்கை ஊட்டுவதாக இருப்பதாகவும் கூறினார்.

கோவை மாநகர SIO வின் பணிகள் சிறப்பாக இருப்பதற்கு பாராட்டுகளையும் கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

நிதானமும், பக்குவமும் கொண்டவர்களாக SlO மாணவர்கள் செயல்படுவது தனக்கு பிடித்திருப்பதாகவும் கூறினார் .

பின்னர் அவர்கள் பொதுச் செயலாளரிடம் தங்களது வெளியீடு களை அளித்து படம் எடுத்துக் கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
30.01.2021