சேலத்தில் மஜக சார்பில் இலவச மருத்துவ முகாம்! மாநில துணை செயலாளர் பாபுஷாஹின்சா தொடங்கி வைத்தார்!


சேலம்:ஜன.31.,

மனிதநேய ஜனநாயக கட்சி சேலம் மாவட்டம் சார்பில் இலவச மருத்துவ சேவை முகாம் மாவட்ட செயலாளர் M.A.மஹபூப் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாநில துணைச் செயலாளர் பாபுஷாஹின்சா, அவர்கள் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

மருத்துவர் DR.KK.சீனிவாசன் .MDஅவர்கள் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை செய்து ஒரு மாதத்திற்கான மருந்துகள் முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இம்முகாமில் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

இதில் மாவட்ட பொருளாளர் ஓ.எஸ். பாபு, மாவட்ட துணைச் செயலாளர்கள் முகமது சுகில், முகமது சபீர், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் யாசர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஹக்கீம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் தஸ்தகீர், மாவட்ட விவசாய அணி செயலாளர் அப்துல் காதிர், மாவட்ட கொள்கை விளக்க அணிச் செயலாளர் சபீர், கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் யாசின், கொண்டலாம்பட்டி பகுதி துணைச் செயலாளர் கார்த்தி, கொண்டலாம்பட்டி பகுதி இளைஞரணி செயலாளர் பூபாலன், அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் அப்பாஸ், அஸ்தம்பட்டி பகுதி பொருளாளர் சலீம், அம்மாபேட்டை பகுதி நிர்வாகிகள், மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சேலம்_மாவட்டம்
31.01.2021