மாணவர் இளைஞர்களை தயார் படுத்துவோம்! மாணவர் இந்தியாவின் காந்தியார் நிகழ்வில் சூளுரை!


ஜனவரி 31,

ஜனவரி 30, காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாளை முன்னிட்டு மாணவர் இந்தியா அமைப்பின் சிறப்பு கருத்தரங்கம் கோவை போத்தனூர் சாலையில் உள்ள வசந்தம் ஹாலில் அமைப்பின் மாநில தலைவர் ஜாவித் ஜாபர், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மாணவர்இந்தியா மாநில செயலாளர் பெரியார் கார்ர்த்தி, மாநில பொருளாளர் பஷீர், பிர்தோஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மாவட்ட செயலாளர் மன்சூர், அவர்கள் தொகுப்புரையாற்றினார்.

மாணவர் இந்தியா அமைப்பு கடந்த 7 வருடங்களாக காந்தியார் கொல்லப்பட்ட நினைவு நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைப்பிடித்து கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.

இதில் ஆசிரியர் கீ.வீரமணியார், வைகோ, சரத்குமார், தி.வேல்முருகன், தனியரசு, சுந்தரவள்ளி உள்ளிட்ட பலர் பங்கேற்று கருத்துரை யாற்றி உள்ளனர்.

சென்னையில் மட்டுமே நடைபெற்று வந்த இந்நிகழ்வு இவ்வாண்டு கோவையில் மாணவர் இந்தியா சார்பில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத், ஊடகவியலர் செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய மூவரும் நிகழ்கால இந்தியாவில் தலைவிரித்தாடும் மதவெறி, ஃபாசிசம், ஒற்றை சித்தாந்தம் ஆகியவை குறித்து சாடினர்.

காந்தியை கொன்ற கோட்சேவுக்கும், Rss க்கும் உள்ள உறவு குறித்து பேசிய ஊடகவியலர் செந்தில், காந்தியை கொன்றது மத பயங்கரவாதம் என்று காட்டமாக பேசினார்.

தனக்கே உரிய தமிழ் கம்பீரத்தோடு பேசிய நாஞ்சில் சம்பத் அவர்கள், காந்தியை கொல்ல 8 முறை சூழ்ச்சி நடந்ததை கூறி, அவரின் துயரத்தை சுட்டிக்காட்டினார்.

எதிர்கால இந்தியாவை காக்க மாணவர்களையும், இளைஞர்களையும் தயார்படுத்த வேண்டும் என்றும், பல்கலைக்கழக வளாகங்களிலும், கல்லூரி வகுப்பறைகளிலும், விடுதி அறைகளிலும் நம் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசினார்.

இந்நிகழ்வின் அரங்கின் இரு தளங்களிலும், வெளியிலும் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. நிறைய முற்போக்காளர்கள் திரண்டிருந்தது மாணவர் இந்தியா நிர்வாகிகளை திருப்தி கொள்ள செய்தது.

அரங்கின் நுழைவாயிலுக்கு மதவெறியர்களால் தொடர் கற்பழிப்புக்கு ஆளாகி கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆசி பாவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

சிறப்பு விருந்தினர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் நூல்கள் அன்பளிப்பு செய்து சிறப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர்கள் அப்துல் பஷீர், பாபுஷாஹின்சா, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன் , மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மற்றும் திரளான மாணவர்கள், பொதுமக்கள், பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
30.01.2021