ஜனவரி 31,
டெல்லியில் விவசாயிகள் மீது நடைப்பெற்ற அரச வன்முறைகளை கண்டித்தும், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை முழுமையாக பெற்றுக் கொடுக்க கோரியும், தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரியும் நான்கு விவசாய கோரிக்கைகளை முன் வைத்து மயிலாடுதுறை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
முத்து வக்கீல் சாலையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி விவசாய அணி மாவட்ட செயலாளர் Y.H.ஹாஜா சலீம் தலைமை ஏற்க மாவட்ட துணைச் செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான் முழக்கங்களை எழுப்பி தொடங்கி வைத்தார்.
இப்போராட்டத்தில் மாநில விவசாய அணியின் செயலாளர் பேரை. அப்துல் சலாம் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
இதில் மாவட்ட பொருளாளர் M.H.ஷாஜஹான், மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டல துணைச் செயலாளர் மாயவரம் ஷபீர் அஹமது, மாவட்ட துணை செயலாளர்கள் நீடூர் மிஸ்பாஹுதீன், தைக்கால் ஆசேன் அலி, வேலம்புதுக்குடி இப்ராஹிம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அமீருல் அஸ்லம் ஆகியோர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் அஜ்மல் உசேன், மனிதநேய தொழிற் சங்க மாவட்ட செயலாளர் நீடூர் லியாகத் அலி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.A ஜெப்ருதீன், மாவட்ட நிர்வாகிகள் முஹம்மது, முஹம்மது சர்புதீன், குத்தாலம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் முஹம்மது லிஃபாஸ், சீர்காழி நகர செயலாளர் கீராநல்லூர் சபீக், தகவல் தொழில் நுட்ப அணி நகர செயலாளர் குர்சித் கான் உள்பட மஜக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.
30.01.2021