தேனி.ஆக.18., தேனி மாவட்டம் #கம்பம் நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் கேரளா மக்களுக்கான நிவாரண நிதி மற்றும் பொருட்கள் திரட்டும் பணிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகிறது.
#கேரளா இடுக்கி, கோட்டயம் போன்ற நகரங்கள் கடும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் இந்த மழை வெள்ளப் பெருக்கால் வீடுகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இயற்கை பேரிடரில் துன்புறும் கேரள இடுக்கி பகுதி மக்களுக்கு பொருட்களை கொண்டு செல்ல உதவிப் பொருட்களை #கம்பம்_பிஸ்மி_மெடிக்கல்_சாதிக் அவர்கள் வழங்கினர்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரிம், மாவட்ட செயலாளர் ரியாஸ், மாவட்ட துணை செயலாளர் கம்பம் கலில், கம்பம் நகர செயலாளர் அஜ்மீர் மற்றும் கம்பம் இளைஞரணியை சேர்ந்த சபீக்ராஜா, சேக், அனிஸ், ஒலி ஆகியோர் உடன் இருந்தனர்.
நிவாரனம் வழங்கிய #கம்பம்_அன்பு_தமிழ்_உறவுகளுக்கு மஜக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கம்பம்_நகரம்
#தேனி_மாவட்டம்