விருதுநகர். ஆக.18., விருதுநகர் வடக்கு மாவட்டம் #வீரசோழன் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் 5வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி பொதுக் கூட்ட்த்துடன் நேற்று (17.08.2018) மாலை எழுச்சியாக நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக #நேதாஜி_சுபாஷ்_சேனா கட்சியின் தலைவர் வழக்கறிஞர்.மகாதேவன் கலந்து கொண்டார். அவர் பேசும் போது மஜகவின் அரசியல் , சமூக அணுகுமுறைகளை பாராட்டி பேசினார். எல்லா சமூக மக்களின் பிரச்சனைகளுக்காகவும் சட்டசபையில் மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA குரல் கொடுப்பதாகவும் பாராட்டி பேசினார். முஸ்லிம்களும், தேவர் சமூக மக்களும் ஒரே மாதிரியாக பாதிக்கப்படுவதாவும், நாம் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட வேண்டும் என்றும் பேசினார்.,
அ.ம.மு.க மாவட்ட செயலாளர் இன்பத் தமிழன் பேசும்போது, தனது தந்தை தாமரைக்கனிக்கும், தனது தலைவர் TTV . தினகரனுக்கும் தமிமுன் அன்சாரி நண்பர் என்றும் கூறி மகிழ்ந்தவர், மன்னர் ஒளரங்கசீப் பின் நேர்மையான ஆட்சி முறை குறித்து சிலாகித்து பேசினார். தனது தந்தை ஷாஜஹானின் இறுதி சடஙகை அரசு செலவில் செய்யாமல், தனது சொந்த செலவில் செய்ததை வரலாற்று குறிப் போடு பேசினார்.,
மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம்.தாஜுதீன் பேசும் போது இந்த ஆம்புலன்ஸ் அனைத்து சமூக மக்களின் உயிர் காக்கும் பணிகளை முன்னெடுக்கும் என்றார்.,
துணைப் பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி பேசும் போது #மஜக-வின் மனிதநேய சேவை பணிகளையும், சமூக நீதிக்காக ஆற்றும் கடமைகளையும் விவரித்தார்.,
மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷீது பேசும் போது, மக்களை பிளவுப்படுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக மஜக போராடும் என்ற தோடு, கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மஜக எடுத்து வரும் முன் முயற்சிகள் குறித்தும் பேசினார்.,
நிறைவுரையாற்றிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசும் போது வீர சோழனுக்கும், #பசும்பொன் தேவருக்கும் இருந்த தொடர்பு குறித்து சுவராஸ்யமான தகவல்களை கூறினார். மேலும் தேவர், கவுண்டர், தலித் சமூகங்களோடு மட்டுமின்றி வன்னியர், நாடார், யாதவர், நாயுடு, முத்தரையர் என அனைத்து சமூக மக்களோடும் கைக்கோர்த்து நல்லிணக்க மிக்க சமூக ஒற்றுமையை உருவாக்க மஜக பாடுபடும் என்றும், தெற்கே நேதாஜி சுபாஷ் சேனாவுடன் இணைந்து சமூக நீதிக்காக பாடுபடுவோம் என்றார்.
மேலும் இனி நிகழ்ச்சிகளில் புத்தகங்களை பரிசளிக்குமாறும், முடிந்த வரை சால்வைகளை தவிர்க்குமாறும், ஒரு வேளை மற்றவர்கள் விரும்பினால் , பயனடையும் வகையில் வெள்ளை துண்டு ( டவல்) போர்த்துமாறும் மனிதநேய சொந்தங்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் உடனே தேவை என ஒரு மருத்துவரிடம் இருந்து அழைப்பு வந்தது. எனவே அவசரமாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டு, உடனே அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தின் மேடையில் ஜமாத்தினருடன் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் நிர்வாகிகளும் வருகை தந்து அமர்ந்திருந்தனர். அனைவருக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, மண்ணடி.ஹாஜி, ஆம்புலன்ஸ் கமிட்டி தலைவர் மெய்தீன், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் இலியாஸ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களுக்கு திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_விருதுநகர்_வடக்கு_மாவட்டம்