கேரளா பாலக்காட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மஜக நிர்வாகிகள் இரண்டாம் கட்டமாக ஆய்வு..!

கோவை.ஆக.18., கடந்த சில நாட்களாக #கேரளா மாநிலம் தாழ்வான பகுதிகளில் ஏற்ப்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று கேரளா #பாலக்காடு பகுதியில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH. அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் செயலாளர் ஃபைசல், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அப்பாஸ், பகுதி நிர்வாகிகள் பூ.காஜா, காஜாஉசேன், அப்பாஸ், ரஹ்மத்துல்லா, மற்றும் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர்.

பிறகு அங்குள்ள ஜமாத் நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் மக்களின் உடனடி நிவாரண உதவிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து முதல்கட்ட நிவாரண பொருட்களை மஜக நிர்வாகிகள் வழங்கினர்.

கடந்த 11.08.2018 அன்று நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில், கேரளா வெள்ள நிவாரண நிதி முதற்கட்டமாக 10இலட்சம் ரூபாய் அனுப்புவது என்ற அறிவிப்பை மஜக வெளியிட்டது என்பது குறிப்பிடதக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_வெள்ள_நிவாரண_பணிக்குழு.
17.08.18