(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை)
சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் நடைபெற்று வந்த அகழ்வாய்வு பணிகள் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழர்களிடையே கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழர்களின் 2 ஆயிரம் ஆண்டு கால பாரம்பர்யத்தையும், வரலாற்றையும் துல்லியமாக எடுத்துக்கூறும் ஆதாரங்கள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சிலருக்கு பிடிக்கவில்லை.
அதன் விளைவாகவே தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அங்கு சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருந்ந அமர்நாத் ராமகிருஷ்ணன் என்பவரை இடமாற்றம் செய்தனர்.
தற்போது திட்டமிட்டே அப்பணிகளில் தொய்வுகளை ஏற்படுத்தி, அகழ்வாராய்ச்சிப் பணியை இழுத்து மூடும் சதியை செய்துவருகின்றனர்.
அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.
எனவே கீழடியில் உள்ள 110 ஏக்கர் நிலத்தில் மொத்தமாக அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் நியமாக நடைபெறச் செய்ய, மீண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணனை இப்பணியில் நியமிக்க, மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும்.
தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும் கீழடி கண்டுப்பிடிப்புகளை சேகரித்து அங்கு ஒரு அருங்காட்சியகம் ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:-
#M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
26.09.2017