ஜன.29.,
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் பெண்கள் குழந்தைகள் என 62 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக குடியரசு தினமான 26 ஆம் தேதிய்ன்று அன்று விவசாயிகள் பேரணி நடைபெற்றது விவசாயிகளின் அமைதி பேரணியில் மத்திய மோடி அரசின் காவல் துறை கடும் தாக்குதலை நடத்தியது , தாக்குதலை கண்டித்தும், மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்தும்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் VMT. ஜாபர், அவர்கள் தலைமையில் மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டின் பிரதான சாலையான பவானி ஆற்றுப் பாலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் சாலை மறியலும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்கள் எழுப்ப பட்டது.
கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் SN சேட் வரவேற்புரை நிகழ்த்தினார், மாநில செயற்குழு உறுப்பினர் காஜா மைதீன், மாவட்ட துணைச் செயலாளர் M.சுல்தான், முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சி மாவட்ட செயலாளர் அசனார், அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
இதில் வடக்கு மாவட்ட பொருளாளர் A.ஷேக் மைதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் M.ஆரிப் அப்பாஸ், MJTS மாவட்ட செயலாளர் முகமது அப்சல், மருத்துவ சேவை அணி மன்சூர். யாசர் .IKP மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, மற்றும் ரசீது, ஆஷிக், மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.
இறுதியாக மாவட்ட துணை செயலாளர் R.யாசர் அரபாத் நன்றி உரை நிகழ்த்தினார்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
28.01.2021