மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது.
போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து அலோசிக்க மஜக கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மன்சூர் தலைமையில் நெய்வேலியில் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணை செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பளருமான நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் கலந்து கொண்டார்.
இதில் போராட்டம் குறித்து மாவட்டம் முழுவதும் 100 -க்கும் மேற்பட்ட இடங்களில் சுவர் விளம்பரங்களை துரிதமாக வரைவது என இலக்கு நிர்ணயித்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
மேலும் மாவட்டம் முழுவதும் 5 பஸ் உட்பட 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்களை போராட்டத்திற்கு அழைத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் ரியாஸ் ரகுமான், தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மத், மாவட்ட துணைச்செயலாளர்கள் அஜ்மீர் கான், பண்ருட்டி யாசின், மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்
19.12.2021