மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது.
போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் வேதை நகர அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை செயலாளர் சேக் அகமதுல்லா அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வேதை நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
19.12.2021