நன்றி பாராட்டும் சந்திப்பு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன் அப்துல் மஜீது MLAசந்திப்பு….

ஏப்ரல்.23.,

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கேரள மாநிலத்தில் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு UDF வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார்.

மலப்புரம், பொன்னானி நாடாளுமன்ற தொகுதிகளில் UDF கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.

இன்று அவரை கேரள மாநில முஸ்லிம் லீக் முன்னணி தலைவர்களில் ஒருவரும், சட்டமன்ற உறுப்பினருமான K.P.A. அப்துல் மஜீது அவர்கள், மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து உரையாடினார்.

இவர் இக்கட்சியின் கொறடாவாகவும், நீண்ட கால பொதுச் செயலாளர் ஆகவும் பணியாற்றி தற்போது 21 வருடமாக MLA-வாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் மஜக-வின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், தங்கள் கட்சியினருக்கு பரப்புரை செய்தமைக்கு நன்றிகளையும் கூறினார்.

அப்போது மாநிலச் செயலாளர்கள் நாகை. முபாரக், நெய்வேலி இப்ராகிம், மாநிலத் துணைச் செயலாளர்கள் ஜாவித் ஜாபர், பேரா. அப்துல் சலாம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கேரளா – #தென்னிந்தியா
22.04.2024.