வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை ஆதரித்து Road Show மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு அவரை வரவேற்று ஒலித்த ஜிந்தாபாத் குரல்கள்…..

ஏப்ரல்.23.,

கேரளாவில் காங்கிரஸ் – IUML அங்கம் வசிக்கும் UDF கூட்டணியை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு வடிவங்களில் தொடர் பரப்புரை செய்து வருகிறார்.

மலப்புரம், பொன்னானி தொகுதி பரப்புரைகளை தொடர்ந்து கோழிக்கோடு தொகுதியிலும் பகல் நேர நிகழ்ச்சி அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் கடும் வெயில் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.

பிறகு திட்டமிட்டப்படி ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் அரிகோட்டில் நடந்த Road Show வில் அவர் பங்கேற்றார்.

அவரது வருகையை முன்னிட்டு முதல் நாள் திட்டமிடப்பட்டு இந்த நிகழ்ச்சி UDF நிர்வாகிகளால் நடத்தப்பட்டது.

காலை முதலே ‘தமிழ்நாட்டிலிருந்து இதில் பங்கேற்க மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வருகை தருகிறார் ‘ என நகரெங்கும் பரப்புரை வாகனங்களில் அறிவிக்கப்பட்டவாறு இருந்தது..

மாலை அங்கு அவர் வந்த போது இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர் 7.30 மணி அளவில் பெருந்திரளான மக்களுடன், எழுச்சி முழக்கங்களுக்கிடையே தொடங்கிய பேரணியில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

அப்போது மலையாளிகள்,

‘தமிமுன் அன்சாரி ஜிந்தாபாத்;
UDF ஜிந்தாபாத் ;
india ஜிந்தாபாத்;

என ஆராவாரம் பொங்க முழங்கினர்.

அரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த Road Show வில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அங்கு சாலையோரம் சாரை, சாரையாக நின்றிருந்த மக்களை பார்த்து கையசைத்து, கை சின்னத்தில் ராகுலுக்கு வாக்களிக்கும்படி வேண்டினார்.

போதிய விளம்பரமின்றி ஒரே நாள் ஏற்பாட்டில் பெரும் கூட்டம் திரண்டது UDF தேர்தல் பொறுப்பாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

Road Show வின் தலைப்பகுதி, அது தொடங்கிய இடத்திலிருந்து பொதுக்கூட்ட இடத்திற்கு வர அரை மணி நேரமானது.

இதில் UDF மாவட்ட தலைவர்களுடன் மஜக மாநிலச் செயலாளர்கள் நாகை. முபாரக், நெய்வேலி. இப்ராகிம், மாநிலத் துணைச் செயலாளர்கள் ஜாவித் ஜாபர், பேரா. அப்துல் சலாம், இளைஞரணி மாநில பொருளாளர் கோவை PMA. பைசல் ஆகியோரும் பங்கேற்றனர்.

அது மட்டுமின்றி கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் M.H. அப்பாஸ் தலைமையில் வந்த மஜக-வினரும், கேரளாவின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்த மனிதநேய சொந்தங்களும் திரளாக பங்கேற்று Road Show வை அமர்களப்படுத்தினர்.

நேற்று கேரளா வாழ் மனிதநேய சொந்தங்களை களத்தில் பங்கேற்க செய்வது குறித்து கோட்டக்கல்லில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்கள் ஒரு புறமும், முகநூல் வழியாக நேரலை செய்தவர்கள் மறுபுறமும் என தமிழ்நாடு மற்றும் கேரள மக்களால் இந்த நிகழ்ச்சி பிரதானப்படுத்தப்பட்டது.

UDF தேர்தல் பணிக்குழு மூலம் இந்நிகழ்ச்சி ராகுல் ஜி அவர்களின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கேரளா – #தென்னிந்தியா
22.04.2024.