சிறையில் மஜக நிர்வாகிகளை சந்தித்தார்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி!

சென்னை. ஏப்.16., இன்று காவிரி போராட்டத்தில் சிறை சென்ற மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது உள்ளிட்ட 7 மஜக நிர்வாகிகளை இன்று புழல் சிறைக்கு சென்று, பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சந்தித்து பேசினார்.

அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், மாநில துணைச் செயலாளர் ஷமிம் ஆகியோர் உடன் சென்றனர்.

சட்ட நடவடிக்கைகள் மூலம் விரைவில் விடுதலைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதை கூறினார். அதிகபட்சமாக மூன்று நாட்களுக்குள் விடுதலை சாத்தியமாகும் என்பதையும் கூறினார்.

சிறையில், அதிகாரிகள் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், சிறையில் நாங்கள் உற்சாகமாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

அதனை அடுத்து மாநிலச் செயலாளர்கள் தைமிய்யா, நாச்சிகுளம் தாஜூதீன், IT WING மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ் உள்ளிட்டோரும் சிறையில் சந்தித்து பேசினர்.

அதன் பிறகு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பேசிய மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள், காவிரி போராட்டத்திற்காக சிறை சென்ற மஜக பொருளாளர் S.S. ஹாரூன் ரசீது உட்பட 8 மஜக நிர்வாகிகள், மேலும் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் A.S. அலாவுதீன், துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெயினுல் ஆபிதின், தமிழக பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் பொதுச்செயலாளர் வன்னிய ராஜா, சமாஜ்வாடி கட்சியின் பிரமுகர் டெல்டா விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை