ஆசிபாவுக்கு நீதி கேட்டு மஜக ஆர்ப்பாட்டம்! உணர்ச்சிவசப்பட்டு முழக்கம் எழுப்பிய போலீஸ்காரர்!

சென்னை. ஏப்.16., காஷ்மீரில் ‘இந்து ஏக்தா மன்ஜ்’ அமைப்பை சேர்ந்தவர்கள் #ஆசிபா என்ற 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து இந்தியா முழுக்க போராட்டம் நடந்து வருகிறது.

சென்னையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் #நீதிகேட்டு_போராட்டம் நடத்தினர்.

நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்பாட்டத்தில், ஆசிபாவுக்கு நீதி கேட்டு மக்கள் முழங்கியபோது , உணர்ச்சி வசப்பட்ட ஒரு போலீஸ்காரர் அவரும் முழுக்கம் எழுப்பி கலங்கினார்.

பத்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆசிபாவுக்கு நீதி கேட்டு பதாகைகளை தூக்கிய படியே நின்றனர். அதில்’அடுத்தது நாங்களா மோடி’ என்ற வாசகம் பத்திரிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

சாலை வழியே சென்ற பொது மக்களும் அப்படியே நின்று ஆசிபா படம் பொறித்த பதாகைகளை பார்த்து பதைத்து போய் ஒரு நிமிடம் நின்ற பிறகே சென்றனர்.

வந்திருந்த பல்வேறு சமூக மக்களும் சோகம் கப்பிய முகத்தோடு நின்றனர்.

இதில் தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு MLA, இதர பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் பொதுச்செயலாளர் வீரவன்னியராஜா, சமாஜ்வாடி கட்சி தலைவர் டெல்டா விஜயன், பாரத மக்கள் இயக்கத்தை சேர்ந்த உமாராணி, மஜக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் A.S அலாவுதீன், மாநில செயலாளர் N.A தைமிய்யா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நிறைவுரையாற்றிய மஜக பொதுசெயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், அந்த குழந்தை ஆசிபா எப்படியெல்லாம் துடித்திருக்குமோ? என்று கலங்கினார். நாங்கள் ஆசிபாவிற்கு மட்டும் நீதி கேட்கவில்லை. உ.பி மாநிலத்தில் பாஜக MLA வால் கற்பழிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் கற்பழிக்கப்பட்ட சிறுமி சிவகாமிக்கும், குஜராத் மற்றும் ஹரியானாவில் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளுக்கும் சேர்த்து தான் நீதி கேட்கிறோம் என்றார்.

இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுலாபுதீன், மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜுத்தீன், சீனி முகம்மது, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், சைபுல்லாஹ், ஷமீம், ஷேக் அப்துல்லாஹ், மாநில IT Wing செயலாளர் ஹாரீஸ், மாநில விவசாய அணி செயலாளர் முபாரக், மாணவர் இந்தியா மாநில நிர்வாகிகள் அசாருதீன், ஜாவித், பஷீர், மாவட்ட செயலாளர்களான பிஸ்மி, கையூம், கடாபி, ஜிந்தா மதார், ரஹ்மத்துல்லா, நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_சென்னை
16_04_18