நீர் நிலைகளில் பரவியுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மஜக வினர் மனு..!

image

கோவை.அக்.31., கோவை மாவட்டத்தில் கடுமையாக நிலத்தடி நீர் அடியோடு வற்றி தண்ணீர் பற்றாக்குறை கடந்தகாலங்களில் ஏற்பட்டது,

தற்போது மழையின் காரணமாக கோவையில் அனைத்து குளங்களும் நிரம்பிவருகிறது ஆனால் அந்த குளங்களில் ஆகாயத்தாமரை பரவியுள்ளதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது,

ஆகவே இது குறித்து கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட சூற்றுச்சூழல் அணி செயலாளர் A.K.முஹம்மது சலீம் அவர்கள் தலைமையில் குளங்களில் பரவியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றக்கோரி கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது,

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்,

இந்நிகழ்வில் மாவட்ட துணைசெயலாளர் ரபீக், மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம் மற்றும் பகுதி நிர்வாகிகள் சமீர், அபு, கமால் பாஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
30.10.17