இன்று (21.04.18) தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் அனைத்து விவசாய தலைவர்கள், உணர்வாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, காவிரி ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் காவேரி தனபாலன், விவசாய சங்க தலைவர் ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எதிர்வரும் ஏப்ரல்-27 அன்று காலை 10 மணியளவில் கல்லணையில் பல்லாயிரக்கணக்கான விவாசாயிகளுடன் சென்று 'உறுதி மொழி ஏற்பு ஒன்று கூடல் நடத்துவது' என்றும், அன்றிலிருந்து தொடர் பரப்புரை செய்து, மே-02 அன்று தஞ்சை விமானப் படை தளத்தை முற்றுகையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், காவிரி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற அணைவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது! நடைபெற இருக்கும் போராட்டங்களுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவையும், விவசாய அமைப்புகளின் ஆதரவையும், பாரதிராஜா தலைமையிலான "தமிழர் கலை, இலக்கிய பண்பாட்டு பேரவையின்' ஆதரவையும் பெறுவதென்று முடிவு செய்யப்பட்டது
மஜக விவசாய அணி
மஜக பொருளாளரை விடுதலை செய்க! நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
நாகை. ஏப்.14., சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பொருளாளர் ஹாரூன் ரசீது மற்றும் மஜக நிர்வாகிகளின் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்த காவல்துறையை கண்டித்தும் அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து விடுதலை செய்ய கோரியும் நாகை தெற்கு மாவட்ட பொறுப்புகுழு தலைவர் வடகரை M.பரகத் அலி தலைமையில் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் திட்டச்சேரி செய்யது ரியாசுதீன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் சாகுல் ஹமீது, ஜாகிர் உசேன், முஜிபுர் ரஹ்மான், மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் முன்னால் மாவட்ட நிர்வாகிகள் ஷேக் மன்சூர்,அல்லா பிச்சை, தெத்தி ஆரிப், பிஸ்மி யுசுப்,திருப்புண்டி அஜிஸ், ரெக்ஸ் சுல்தான், ஜலாலுதின், தம்ஜூதீன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இராமதாஸ் , புருனை மண்டல செயலாளர் தாஹா மரைக்காயர் , மஜக பகுருதீன் அலி, மஜக டேவிட் , ஒன்றிய
திருச்சியில் மஜக நிர்வாக குழு மற்றும் சிறப்பு நிர்வாககுழு கூட்டம்..!
திருச்சி.ஜன.08., திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பெமினா ஹோட்டலில் நேற்று (07.01.2018) காலை மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாககுழு கூட்டமும், மதியம் முதல் இரவு வரையில் சிறப்பு நிர்வாககுழு கூட்டமும் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, தலைமை நிர்வாககுழு உறுப்பினர்கள் JS.ரிஃபாயி ரஷாதி, AS.அலாவுதீன், துணை பொதுச்செயலாளர்கள் கோவை சுல்தான் அமீர், மதுக்கூர் ராவுத்தர்ஷா, மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் NA.தைமியா, H.ராசுதீன், நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முகம்மது, மாநில துணைச் செயலாளர்கள் கோவை பசீர், Er.சைபுல்லாஹ், புளியங்குடி செய்யது அலி, பல்லாவரம் சபி, ஈரோடு பாபு ஷாஹின்ஷா, புதுமடம் அனீஸ், திருமங்கலம் சமீம் ஆகிய மாநில நிர்வாகிகள் இருந்தனர். மேலும் அணி நிர்வாகிகளான விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆரோக்கியமான பல கருத்துக்களை கொண்டு கட்சியின் வளர்ச்சினை பற்றி நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 07.01.18
உள்ளாட்சி வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம்..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!
நாகை.ஜன.02., நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை சம்பந்தமான கருத்து கேட்பு மற்றும் ஆட்சேபணை தெரிவிக்க அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொள்ளும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) விவசாயிகள் அணி மாநில செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதின் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_ தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாகை_தெற்கு_மாவட்டம். 02.01.2018
சிறைவாசிகள் முன் விடுதலை ! தமிழக முதல்வருக்கு மஜக நன்றி!
நாகை. ஜன.01., இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது:- MGR அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று திண்டுக்கல்லில் பேசிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருப்பதை மஜகவின் சார்பிலும், தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை சார்பிலும் வரவேற்க்கிறோம். இதற்காக தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அதுபோல இக்கோரிக்கையை நேர்மையாக அனுகிய சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .C. V. சண்முகம் அவர்களுக்கும், துணை நின்ற அனைத்து அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். சட்டமன்றத்தில் எங்களோடு இக்கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விடுதலையால் சாதி, மத, வழக்கு பேதமின்றி அனைத்து கைதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறோம். இதை மாண்புமிகு அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட அரசு, குறிப்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் கருணையோடும், கனிவோடும், மனிதாபிமானதத்தோடு பரிசிலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பத்திரிக்கையாளர்