காவிரி உரிமை போர் தொடர்கிறது! ஏப்ரல்-27 கல்லணையில் ஒன்றுகூடல்! மே-02 தஞ்சை விமான படைதளம் முற்றுகை!

இன்று (21.04.18) தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் அனைத்து விவசாய தலைவர்கள், உணர்வாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, காவிரி ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் காவேரி தனபாலன், விவசாய சங்க தலைவர் ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எதிர்வரும் ஏப்ரல்-27 அன்று காலை 10 மணியளவில் கல்லணையில் பல்லாயிரக்கணக்கான விவாசாயிகளுடன் சென்று ‘உறுதி மொழி ஏற்பு ஒன்று கூடல் நடத்துவது’ என்றும், அன்றிலிருந்து தொடர் பரப்புரை செய்து, மே-02 அன்று தஞ்சை விமானப் படை தளத்தை முற்றுகையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், காவிரி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற அணைவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது!

நடைபெற இருக்கும் போராட்டங்களுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவையும், விவசாய அமைப்புகளின் ஆதரவையும், பாரதிராஜா தலைமையிலான “தமிழர் கலை, இலக்கிய பண்பாட்டு பேரவையின்’ ஆதரவையும் பெறுவதென்று முடிவு செய்யப்பட்டது .

இதில் கட்சி, அரசியல் பார்க்காமல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது

இந்நிகழ்வில் மஜக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் A.S.அலாவுதீன், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மஜக மாவட்ட செயலாளர் அஹமது கபீர், மாவட்ட பொருளாளர் ஜப்பார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தி தொகுப்பு :

#ஒத்துழையாமை_இயக்கம்
#காவிரி_போராட்டக்_குழு.