சென்னை.நவ.05., தினகரன் பத்திரிக்கையின் செய்தியாளர் திரு.மோகன் அவர்கள், இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மீதும், பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மீதும் மிகவும் நேசம் பாராட்டியவர். பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சட்டமன்ற உரைகளை உடனுக்குடன் தொகுத்து செய்திகளாக்கிய ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர் என்றால் மிகையில்லை. பல இளம் செய்தியாளர்களை ஊக்குவித்து, வழிகாட்டிய பெருமைக்குரியவர். பல சந்தர்ப்பங்களில், சக பத்திரிக்கையாளர்களின் உரிமைகளுக்காக, சமரசம் இன்றி குரல் கொடுத்தவர். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக பத்திரிக்கை நண்பர்களுக்கும், அவர் சார்ந்த பத்திரிக்கை நிறுவனத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று மாலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியி்ல் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில செயலாளர் சாதிக் பாட்சா, மாநில துணைச் செயலாளர் ஷமீம் அகமது, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக் ஆகியோர் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். #தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை
செய்திகள்
ஆம்பூர் மஜக சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்…!
வேலூர்.நவ.05., மனிதநேய ஜனநாயக கட்சி ஆம்பூர் நகரம் மோட்டுக்கொள்ளை 1-வது வார்டு கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நகர செயலாளர் பிர்தோஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் M.ஜஹீரூஸ் ஜமா கலந்துகொண்டு நிலவேம்பு கசாயம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பொது மக்கள் பயனடைந்தார்கள். இதில் TR.முன்னா (எ) நஸிர், தப்ரேஸ் அஹ்மத் நகர இளைஞர் அணி செயலாளர், அஷ்யாக் அஹ்மத் நகர து செயலாளர் ,அப்ரோஸ் முன்னாள் நகர செயலாளர், ஷாயின் ஷா, நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஆம்பூர்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 05.11.2017
இளையான்குடியில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜக மக்கள் திரள் பொதுக்கூட்டம்..!
சிவகங்கை.நவ.05.,மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரம் சார்பில் "மாற்றத்தை நோக்கி" எனும் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டம் மஜக நகர செயலாளர் உமர் கத்தாப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மஜகவின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.Com மற்றும் #நாம்_தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் #சீமான் ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சி உரைகள் நிகழ்த்தினார்கள். இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.முஹம்மது நாசர், துணைப் பொதுச் செயலாளர் மண்ணை செல்லச்சாமி, தலைமை கழக பேச்சாளர் கோவை T.A.நாசர், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில துணைச் செயலாளர்கள் முஹம்மது சைப்புல்லாஹ், வசிம் அக்ரம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பஷிர் அஹமத், செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா ஆகிய மாநில நிர்வாகிகள் மற்றும், மதுரை மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா, விருதுநகர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இலியாஸ், மாவட்ட பொருளாளர் சாகுல் அமீது சேட், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ரஹ்மான், செய்யது உமர் முக்த்தார், இராமநாதபுரம்
மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP)யின் அமீரக செயற்குழு கூட்டம்..!
அபுதாபி.நவ.05,. மனிதநேய கலாச்சாரப் பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம் அபுதாபி பனியாஸ் கேம்பில் நடைபெற்றது. MKP அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். அமீரக பொருளாளர் அதிரை அஸ்ரஃப் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அமைப்பின் எதிர்கால திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் மண்டல செயல்பாடுகள் பற்றியும் மற்றும் தலைமை நிர்வாகிகளை அழைத்து மாநாடு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிறைவாக அபுதாபி மண்டல செயலாளர் லால்பேட்டை தையுப் அவர்கள் நன்றியுரையாற்றினார். தகவல்: #MKP_ஊடகபிரிவு #ஐக்கிய_அரபு_அமீரகம் 04.11.2017
பேராவூரணி கிளை நிர்வாகிகள் கூட்டம் !
தஞ்சை.நவ.05., தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த சில தினங்கள் முன்பு துவங்கப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை நிர்வாகிகள் கூட்டம் 04-11-2017 நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.ஏ. சலாம் தலைமையில் நடைபெற்றது. எதிர்வரும் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை பேராவூரணி கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடத்துவது என்றும், அந்நிகழ்விற்கு பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்களையும், துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களையும் அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் இளைஞர்கள் சிலர் ஒருங்கிணைப்பாளர் சலாம் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 04-11-2017