You are here

மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP)யின் அமீரக செயற்குழு கூட்டம்..!

image

image

image

அபுதாபி.நவ.05,. மனிதநேய கலாச்சாரப் பேரவையின்
அமீரக செயற்குழு கூட்டம் அபுதாபி பனியாஸ் கேம்பில் நடைபெற்றது.

MKP அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். அமீரக பொருளாளர் அதிரை அஸ்ரஃப் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அமைப்பின் எதிர்கால திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் மண்டல  செயல்பாடுகள் பற்றியும் மற்றும் தலைமை நிர்வாகிகளை அழைத்து மாநாடு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நிறைவாக அபுதாபி மண்டல செயலாளர் லால்பேட்டை தையுப் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

தகவல்:
#MKP_ஊடகபிரிவு
#ஐக்கிய_அரபு_அமீரகம்
04.11.2017

Top