வேலூர்.மே.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் நேற்று வேலூர் கிழக்கு மாவட்டம் வருகை புரிந்து, பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்கள் . #நிகழ்வு_1 மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சைதாப்பேட்டை பகுதி சார்பாக 31வது மேற்கு கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவ் வழியாக சென்ற பொது மக்களில் ஒருவரான சகோதரர் தன்னிச்சையாக வருகை தந்து வேலூர் மாவட்டத்தில் மஜக-வினரின் களப்பணியை வெகுவாக பாரட்டியதுடன் இவர்களின் களப்பணியை கண்டவுடன் எனக்கும் உங்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை வருகிறது என்றார். #நிகழ்வு_2 கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாநகர பழைய மீன் மார்கெட் அருகில் நீர் மோர் பந்தல் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் திறந்து வைத்தார். இதில் பொதுமக்கள்
முகாம்கள்
மஜக 3ஆம் ஆண்டு துவக்க விழா.! கத்தாரில் MKP சனாயா மண்டலம் நடத்திய இரத்த தான முகாம்…!!
கத்தார்.ஏப்.23., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மூன்றாம் ஆண்டு துவாக்கத்தை முன்னிட்டு அதன் வெளிநாடுகள் பிரிவான #மனிதநேய _கலாச்சார_பேரவை (MKP) கத்தார் சனாயா மண்டலம் #இரத்த_தான முகாம் சார்பில் நடைபெற்றது. இரத்த தான முகாமை #கத்தார் அலோசகர் கீழக்கரை ஹூசைன் துவக்கிவைத்தார். சனாயா மண்டல செயலாளர் நூர் முஹம்மத் தலைமை தாங்கினார். இதில் சனாயா மண்டல பொருளாளர் காட்டுமன்னார் கோயில் ஓளியுள்ளா, துஹைல் மண்டல செயலாளர் ஹாஜ் முஹம்மத், தோஹா மண்டல செயலாளர் பொதக்குடி புர்ஹானுதீன், சனாயா மண்டல துணை செயலாளர் முத்துப்பேட்டை யூனுஸ், அணி Al million நிர்வாகிகளாகிய திருமங்களம் சுந்தர்., வீரபாண்டி, மேலும் கத்தார் செயலாளர் உத்தமபாளையம் உவைஸ், கத்தார் பொருளாளர் ஆயங்குடி யாசீன், கத்தார் ஒருங்கிணைப்பாளர் நெல்லை KST அப்துல அஜீஸ், துணை செயலாளர்கள் தைக்கால் சகாபுதீன், புதுமடம் பைஸல், மீசல் செய்யது கனி, சந்கேந்தி சமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பல தோழமைச்சகோதரர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு மிகவும் ஆர்வத்துடன் இரத்ததானம் கொடுத்தனர். தகவல் : #MKP_IT_WING #MKP_சனாயா_மண்டலம் #கத்தார்_மனிதநேய_கலாச்சார_பேரவை
கீழக்கரையில் மஜக தலைவர்கள் முகாம்..!
கீழக்கரை. டிச.09., இராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைப்பு ,பிரமுகர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், வருகை தந்தார். தொண்டி, தேவிப்பட்டினம் , இராமநாதபுரம் சந்திப்புகளை முடித்துவிட்டு மாலை 6மணியளவில் கீழக்கரைக்கு வருகைதந்து முன்னாள் மாவட்ட செயலாளர் ஹபீப் அவர்கள் திருமணத்தில் பங்கேற்றார். அப்போது கீழக்கரையின் முக்கிய பிரமுகர்கள், ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை சந்தித்து மஜகவின் பணிகள் குறித்தும், நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் உரையாடினார். அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணை பொதுசெயலாளர் மைதீன் உலவி, துணை பொதுசெயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் ஆகியோரும், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ. எம். ஹாரிஸ், விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் வருகை தந்தனர். இந்நிகழ்வுகளில் மஜக மாவட்ட நிர்வாகிகள் இலியாஸ், முகவை பீர், சோனப்பூர் அஜ்மல், செய்யாது இப்ராஹிம், அப்துல் கபூர், அப்துல் நசீர், செய்யது அபுதாஹிர், சுல்தான் சீனி அபுதாஹிர், ஹபீப் முகம்மது , தொண்டி முகம்மது ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_மாவட்டம்
ஆம்பூர் மஜக சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்…!
வேலூர்.நவ.05., மனிதநேய ஜனநாயக கட்சி ஆம்பூர் நகரம் மோட்டுக்கொள்ளை 1-வது வார்டு கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நகர செயலாளர் பிர்தோஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் M.ஜஹீரூஸ் ஜமா கலந்துகொண்டு நிலவேம்பு கசாயம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பொது மக்கள் பயனடைந்தார்கள். இதில் TR.முன்னா (எ) நஸிர், தப்ரேஸ் அஹ்மத் நகர இளைஞர் அணி செயலாளர், அஷ்யாக் அஹ்மத் நகர து செயலாளர் ,அப்ரோஸ் முன்னாள் நகர செயலாளர், ஷாயின் ஷா, நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஆம்பூர்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 05.11.2017
ஆத்தூர் மஜக சார்பில் இரண்டாம் கட்ட நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்…!
தூத்துக்குடி.அக்.29., தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஆத்தூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் பள்ளிவாசல் அருகே நகர செயலாளர் அன்வர் பாஷா தலைமையில் நடைப்பெற்றது. இதில் நகர மருத்துவ சேவை அனி செயலாளர் அரபாத், நகர பொருளாலர் இபுராகிம், துணைச் செயலாளர்கள் காஜா, அல்தாப் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் மஜகவின் செயல்விரர்கள் கலந்து கொண்டனர். இதில் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் நிலவேம்பு குடிநீர் அருந்தி பயணடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி தெற்கு மாவட்டம் 29.10.2017