கீழக்கரை. டிச.09., இராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைப்பு ,பிரமுகர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், வருகை தந்தார்.
தொண்டி, தேவிப்பட்டினம் , இராமநாதபுரம் சந்திப்புகளை முடித்துவிட்டு மாலை 6மணியளவில் கீழக்கரைக்கு வருகைதந்து முன்னாள் மாவட்ட செயலாளர் ஹபீப் அவர்கள் திருமணத்தில் பங்கேற்றார்.
அப்போது கீழக்கரையின் முக்கிய பிரமுகர்கள், ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை சந்தித்து மஜகவின் பணிகள் குறித்தும், நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் உரையாடினார்.
அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணை பொதுசெயலாளர் மைதீன் உலவி, துணை பொதுசெயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் ஆகியோரும், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ. எம். ஹாரிஸ், விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் வருகை தந்தனர்.
இந்நிகழ்வுகளில் மஜக மாவட்ட நிர்வாகிகள் இலியாஸ், முகவை பீர், சோனப்பூர் அஜ்மல், செய்யாது இப்ராஹிம், அப்துல் கபூர், அப்துல் நசீர், செய்யது அபுதாஹிர், சுல்தான் சீனி அபுதாஹிர், ஹபீப் முகம்மது , தொண்டி முகம்மது ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_இராமநாதபுரம்_மாவட்டம்