You are here

MJTS தொழிற்சங்கத்தினர்… மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி அவர்களுடன் சந்திப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான MJTS தொழிற்சங்க அமைப்பின் சார்பாக நிர்வாகம் அமைக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வருகிறது.

அதை தொடர்ந்து MJTS தொழிற்சங்க மாநில துணைச்செயலாளர் இப்ராஹிம், தலைமையில் நிர்வாகிகள் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி EX.MLA அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் குமார், மாவட்ட பொருளாளர் ஷான் பாஷா, வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அல்லாபகஷ், பொருளாளர் இளங்கோவன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் இதாயத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் முகமது அலி ஜின்னா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Top