திருவல்லிக்கேணியில்… மஜக வில் இணைந்த மாற்று கட்சி இளைஞர்கள்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் சலிம் தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சித்திக் முன்னிலையில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்தவர்களுக்கு மாநில துணைச்செயலாளர் முஹம்மது அஸாருதீன், அவர்கள் உறுப்பினர் அட்டை வழங்கினார்.

மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான் நிர்வாகிகளை வரவேற்று சால்வை அணிவித்தார்.

மேலும் கட்சியில் இணைந்தவர்களிடத்தில் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றி மாநில துணைச் செயலாளர் அசாருதீன் அவர்கள் உரையாற்றினார்.

நிகழ்வில் மாவட்ட பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.