தமிழ்நாட்டின் புதல்வர்கள் நாங்கள்… அய்யம்பேட்டை மஜக இல்ல மணவிழாவில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…

மஜக சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் MJVS மாநிலச் செயலாளர் நாட்டாமை யூசுப் ராஜா, அவர்களின் மகன் அய்யூப் அவர்களுக்கும் சஃபிலா ஆஸ்மி, அவர்களுக்கும் இன்று அய்யம்பேட்டையில் திருமணம் நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலானா நாசர், முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவரும் வக்பு வாரிய தலைவருமான அப்துல் ரகுமான், முஸ்லிம் லீக் துணைத் தலைவர் நவாஸ்கனி, எம்பி , மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, நாச்சிகுளம் தாஜுதீன், மாநிலச் செயலாளர் நாகை முபாரக், ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர்.

பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி பேசியதாவது…

இத் திருமண விழாவில் தமிழ்நாடு வாழ்க என்ற முழக்கத்தோடு இம்மணமக்களை வாழ்த்த திரண்டு இருக்கிறோம்.

தமிழ்நாடு வாழ்க என முழங்குவதற்கு பல காரணங்கள் உண்டு தமிழ்நாட்டின் சிறப்புகளை உணர வேண்டும் என்றால் ஒரு நாளாவது உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார் , போன்ற வட மாநிலங்களில் சென்று பார்க்க வேண்டும்.

அல்லது வட இந்தியாவில் இருந்து வரும் ரயில்களில் பயணம் செய்ய வேண்டும்.

இதன் மூலம் மட்டுமல்ல கலாச்சாரம் ஒற்றுமை மூலம் தமிழ்நாட்டின் சிறப்பை உணரலாம்.

இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், ஒற்றுமை சிறப்பாக உள்ளது மாமன் மச்சான்களாக நாம் வாழ்கிறோம் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து வருகிறோம். அதனால்தான் தமிழ்நாட்டின் புதல்வர்கள் என்பதில் பூரிப்படைகிறோம்.

இங்கு சோழர் காலத்தில் சோழ மன்னர்களும், முஸ்லிம்களும், நெருக்கமாக வாழ்ந்துள்ளனர் , சுலைமான் நபி அவர்களுக்கு பூம்புகார் துறைமுகம் வழியே ஏற்றுமதி செய்த முத்துக்கள் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாண்டிய மன்னன் சீனாவுக்கான தூதுக்குழுவுக்கு ஒரு முஸ்லிமை தான் தலைவராக அனுப்பி வைத்தார்.

சேர மன்னன், சேரமான் பெருமாள் தான், இஸ்லாத்தை தழுவிய முதல் மன்னர் ஆவார்.

இங்கு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், ஒற்றுமையோடு வழி நடத்திய நாடு தமிழ்நாடு.

இந்த ஒற்றுமையை வட இந்தியாவில் பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

திருமண நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் வல்லம் அகமது கபீர், நெய்வேலி இப்ராஹிம், பேராவூரணி அப்துல் சலாம், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் மஹ்ரூப், கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலாளர் காதர் பாட்ஷா, தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்லா, பொருளாளர் ஷேக் அப்துல்லா, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் அறந்தாங்கி முபாரக், தஞ்சை வடக்கு மாவட்ட அமைப்பு குழு தலைவர் ஆசாத், அரியலூர் மாவட்ட செயலாளர் அக்பர், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.