மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் 73வது குடியரசு தினவிழா…!

ஜனவரி.26., சுதந்திர இந்தியாவின் 75ஆம் ஆண்டில் நம் நாட்டின் 73வது குடியரசு தின விழாவை இன்று கொண்டாடுகிறோம்.

குடியரசு தினத்தை தமிழகம் முழுவதும் மமனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் உள்ள பாரிஸ் ஆண்டர்சன் தெரு, புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்.

அப்போது சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தும், சாதி, மத, வெறி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில இளைஞரணி செயலாளர் முஹம்மது அசாருதீன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மி, மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன்,ரவூஃப் ரஹீம், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தாஹா,துறைமுகம் அசன் அலி, துறைமுகம் பகுதி நிர்வாகிகள், திருவல்லிக்கேணி பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்தியசென்னை_கிழக்கு
26-01-2022