
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகளுக்கு மஜக சார்பில் பிரட் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்பட்டது!
மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் சந்தித்து ஆறுதல்!
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர்
M.தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அணீஸ், இளைஞரணி செயலாளர் ஷமீம் அகமது ஆகியோரும் உடன் சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வர்தா புயலால் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையறிந்து அங்கு நேரில் சென்ற பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையிலான மஜக குழு அகதிகள் முகாமில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். உடனடியாக கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
பிறகு அங்குள்ள மக்களுக்கு மஜக சார்பில் பிரட் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்பட்டது.
அந்த முகாமில் 950 குடும்பங்கள் வசிகின்றன என்பது குறிப்பிடதக்கது.
மேலும் புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் நிலை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்க்கு கொண்டு செல்வதாகவும் பொதுச்செயலாளர் உறுதியளித்தார்.
பிறகு திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுப்பட்டு வரும் மஜக சகோதரர்களுக்கு தலைமையின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். அகதிகள் முகாமில் களப்பணியாற்றிய திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மௌலானா முகம்மது தாரிக், இப்ராஹீம் மற்றும் அப்பாஸ் உள்ளிட்டவர்களிடம் அகதிகள் முகாமில் நடைபெறும் நிவாரண பணிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
பிறகு மத்திய சென்னை, தென்சென்னை, வடசென்னை மற்றும் காஞ்சி மாவட்டங்களில் அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுப்பட்ட மஜக சகோதரர்களை தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்தார்.
பிறகு சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சி மாவட்டங்களில் மேலும் தொடர வேண்டிய மீட்பு பணிகள் குறித்து மஜக சார்பில் திரட்டப்பட்ட தகவல்களை முதலமைச்சர் அலுவலகத்திற்க்கும் தொடர்பு கொண்டு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் முயற்சி மேற்கொண்டார்.
தகவல்;
மஜக ஊடகப் பிரிவு(சென்னை)