தஞ்சை மத்திய மாவட்டம் அய்யம்பேட்டையில் ‘இயக்கம் வளர்க்கும் கலை’ என்ற ஒன்று கூடல் நிகழ்வு மாநில துணைச் செயலாளர் வல்லம் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று கலந்துரையாடினார்.
கட்சி வளர்ச்சி, களப்பணி, நிர்வாக விரிவாக்கம் மற்றும் மக்களுடன் மஜக-வின் இலக்கு ஆகியவை குறித்து வகுப்பெடுத்தார்.
பிறகு கலந்துரையாடலும் நடைப்பெற்றது
இதில் துணைப் பொதுச் செயலாளர்கள் மன்னை செல்லசாமி, நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநிலச் செயலாளர் நாகை முபாரக், மாநில துணைச் செயலாளர்கள் நெய்வேலி இப்ராகிம், பேராவூரணி அப்துல் சலாம் ஆகியோர் பங்கேற்றனர்.
தஞ்சை மத்திய மாவட்டம், தஞ்சை வடக்கு மாவட்டம், அரியலூர், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.