பெரம்பலூர் மாவட்ட உலமாசபை ஒருங்கிணைத்த கூட்டத்தில் மஜக பங்கேற்பு!


மார்ச்.31,
பெரம்பலூரில், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை ஒருங்கிணைத்த திமுக ஆதரவு கட்சிகளின் மற்றும் ஜமாத் தார்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர் மா. பிரபாகரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யவது குறித்து கலந்தாலோனை செய்யப்பட்டது.

அதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் தாளம்பாடி முஜிப் ரஹ்மான் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மஜக மாவட்ட துணைச் செயலாளர் உதயசூரியன் மஜகவின் சார்பில் பங்கேற்று ஒருமனதாக வாக்களித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிப்பெற செய்ய வேண்டிய அவசியம் குறித்து கருத்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜஹாங்கிர் பாஷா, அப்துல் ரஹ்மான், மாவட்ட அணி மற்றும் ஒன்றிய, நகர மஜக நிர்வாகிகள் திரளான கலந்துக் கொண்டனர்.

தகவல்;

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#பெரம்பலூர்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021
30.03.2021